பழங்குடியினத்தவர் ஒருவர் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது: சங்மா || record my grateful thanks Tribal forum India
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
பழங்குடியினத்தவர் ஒருவர் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது: சங்மா
பழங்குடியினத்தவர் ஒருவர் ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை இந்தியா இழந்துவிட்டது: சங்மா
புதுடெல்லி,ஜூலை.22-

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி அமோக வெற்றிபெற்று புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரணாப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் பி.ஏ.சங்மாவை வீழ்த்தி நாட்டின் 13-வது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த சங்மா, தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதோடு, தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரணாப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பேசிய சங்மா, ‘வெற்றிபெற்ற பிரணாப்பை நான் வாழ்த்துகிறேன். நாட்டின் பழங்குடியின மக்களுக்கும், என்னை வேட்பாளராக முன்னிறுத்திய அ.தி.மு.க, பாரதீய ஜனதா போன்ற கட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக நவீன் பட்நாயக், ஜெயலலிதா, அருண் ஜெட்லி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன். தேர்தலில் நான் தோற்றிருந்தாலும், பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது. அரசியல் பாகுபாடு மற்றும் பாரபட்சங்களால்தான் நான் தோல்வியடைந்தேன்’ என்றார்.

மேலும், ‘ஜனாதிபதி தேர்தலுக்கான நடத்தை விதிகள் பலப்படுத்தப்பட வேண்டும். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலாவது நடத்தை விதிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்’ எனவும் சங்மா கோரிக்கை விடுத்தார்.   
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருகிறது - நடிகர் அமீர்கான் பேச்சு: மத்திய அரசு நிராகரிப்பு - ராகுல் காந்தி ஆதரவு

நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாக நடிகர் அமீர்கான் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ....»