Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 15 பேர் பலி
இஸ்லாமாபாத்,ஜூலை.22-

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான ஒரக்சாய் என்னும் பழங்குடிப் பகுதியில் பதுக்கியிருந்த தலிபான் தீவிரவாதிகள் மீது, அந்நாட்டு விமானப்படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் தீவிரவாதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர்.

விமானப்படையினரின் இத்தாக்குதலில் கல்ஜியோ மற்றும் தபோரி பகுதிகளில் பதுங்கியிருந்த மேலும் பல தீவிரவாதிகள் காயம் அடைந்துள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட தெரிக்-இ-தலிபான் இயக்கத்தினர் சமீபகாலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே அவர்களைக் குறிவைத்து விமானப்படையினர் அடிக்கடி இதுபோன்ற திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.    

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்