இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார் || india president pranab mukherjee select
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
  • 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: தோல்வியைத் தவிர்க்க தென் ஆப்பிரிக்கா நிதான ஆட்டம்
  • வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு
  • உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே முதல் இடம் வகிப்பதற்காக தமிழகத்திற்கு விருது
  • உள்நாட்டு தயாரிப்பான அக்னி-1 ஏவுகணை சோதனை
  • பண்ருட்டி அருகே விசூர் கிராமத்தில் வெள்ள சேதத்தை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்
  • பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கு: சி.பி.ஐ. முன் ஆஜராகும்படி தயாநிதிமாறனுக்கு உத்தரவு
  • ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் டிசம்பர் 5-ம் தேதிமுதல் காலவரையற்ற போராட்டம்
இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்
இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்
புதுடெல்லி,ஜூலை.22-

பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்காக கடந்த 19-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான பிரணாப் முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெற்று, பிரணாப் முகர்ஜி அபார வெற்றி பெற்றார்.

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தமுள்ள 748 எம்.பி.க்களில், 527 பேர் பிரணாப்புக்கு வாக்களித்துள்ளனர். ஆனால் சங்மாவுக்கு 206 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். 15 எம்.பி.க்களின் வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 10.5 லட்சம் வாக்குகளில் பிரணாப்புக்கு ஆதரவாக 5.58 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மா 2.01 லட்சம் வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

நாட்டின் 13-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

வரும் 25-ம் தேதி பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜிதான் மேற்குவங்க மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய ஜனாதிபதி ஆவார். 76 வயதான பிரணாப் வரும் 2017-ம் ஆண்டு வரை ஜனாதிபதியாகப் பதவி வகிப்பார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

இன்று மாலை தேநீர் விருந்து: சோனியா, மன்மோகனுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி, நவ. 27–பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.நவம்பர் 26–ந்தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ....»