கேரள சிறுமி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது || kerala girl murder case cbcid enquiry start
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
  • திருப்பதியில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியன்று இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
  • மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
  • தமிழக மீனவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் விடுவிக்க பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
  • உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரை இறுதியில் சாய்னா தோல்வி
கேரள சிறுமி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
கேரள சிறுமி கொலை வழக்கு: சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
பெரம்பலூர், ஜூலை. 22-

கேரள மாநிலம் பீர்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சத்யா (வயது 15). மாணவியான இவர் பெரம்பலூர் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். அப்போது சத்யாவை கற்பழித்து கொலை செய்ததாக பெரம்பலூர் போலீசார் வழக்குபபதிவு செய்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், தி.மு.க. பிரமுகர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, கார் டிரைவர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

கைதான 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த 19-ந்தேதி திருச்சி மருத்துவ கல்லூரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது. எனினும் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதனை தொடர்ந்து சி.பி.சி. ஐ.டி.க்கு மாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் உத்தரவிட்டார்.

அதன்படி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாபதி தலைமையிலான போலீசார் பெரம்பலூர் விரைந்தனர். அவர்களிடம் கேரள சிறுமி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. உடனடியாக விசாரணையும் தொடங்கியது.

முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரின் உறவினர்கள், வேலையாட்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. கைதான 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நாளை (23-ந்தேதி) பெரம்பலூர் முதன்மை கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - பெரம்பலூர்