தக்கலை அருகே கேரள அரசு பஸ் கல்வீசி உடைப்பு: 3 வாலிபர்களை போலீஸ் தேடுகிறது || thakalai near kerala government bus aattack
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
தக்கலை அருகே கேரள அரசு பஸ் கல்வீசி உடைப்பு: 3 வாலிபர்களை போலீஸ் தேடுகிறது
தக்கலை அருகே கேரள அரசு பஸ் கல்வீசி உடைப்பு: 3 வாலிபர்களை போலீஸ் தேடுகிறது
அழகியமண்டபம், ஜூலை. 22-

திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று இரவு 10 மணிக்கு நாகர்கோவில் நோக்கி கேரள அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. மார்த்தாண்டத்தை அடுத்துள்ள இரவிபுதூர் கடை பஸ் நிறுத்தத்தில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அங்கு சில பயணிகள் இறங்கினர்.

இதையடுத்து டிரைவர் மீண்டும் பஸ்சை எடுக்க முயன்றார். ஆனால் பஸ் அங்கிருந்து நகரவில்லை. திடீரென பழுதானதால் நடு ரோட்டிலேயே நின்றது. அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் பஸ் டிரைவரிடம் நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி இருப்பதாக கூறி தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் டிரைவரை தாக்க முயன்ற 3 பேரும் திடீரென கற்களை வீசி பஸ் கண்ணாடிகளை உடைத்தனர். அதன் பின்பு அங்கிருந்து தப்பி விட்டனர். இது தொடர்பாக பஸ் டிரைவர் கேரள மாநிலம் செம்பூரையைச் சேர்ந்த சசீந்திரன் (வயது 45) தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் டென்னிசன் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் தேடி வருகிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - கன்னியாகுமரி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif