இலங்கைக்கு எதிரான போட்டியில் மெதுவாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம் || MS Dhoni and team fined for slow over rate
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
இலங்கைக்கு எதிரான போட்டியில் மெதுவாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம்
இலங்கைக்கு எதிரான போட்டியில் மெதுவாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம்
புதுடெல்லி,ஜூலை.22-

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பகலிரவு ஆட்டமாக நடந்த இப்போட்டியில் இரண்டாவதாகப் பந்துவீசிய இந்திய அணியினர் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஓஜா மற்றும் பகுதிநேர பந்துவீச்சாளரான ஷேவாக் ஆகியோர் பந்துவீசியும் சரியான நேரத்தில் பந்துவீசி முடிக்க முடியாமல் போனது.

இதுபற்றி விசாரணை நடத்திய போட்டி ஒருங்கிணைப்பாளர் கிறிஸ் பிராட் இந்திய அணிக்கும், அதன் கேப்டன் டோனிக்கும் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளார்.

இதே தவறுக்காக இந்திய கேப்டன் டோனிக்கு ஏற்னவே பலமுறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய இலங்கை பயணத்தின்போதும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட டோனிக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போதைய ஒருநாள் தொடரிலும் இதே காரணத்திற்காக ஒரு ஒருநாள் போட்டியில் ஆட அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif