ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசை பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது || aadipoora templecar function sriraingam things send to srivilliputhur
Logo
சென்னை 25-05-2015 (திங்கட்கிழமை)
  • வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: இன்று ஒப்பந்தம் கையெழுத்து
  • 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. முடிவுகள் இன்று வெளியாகிறது
  • பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் மதுரா பயணம்
  • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது
  • தூத்துக்குடியில் வீட்டின் மேல்தளம் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசை பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது
ஆடிப்பூர தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவில் சீர்வரிசை பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பிவைக்கப்பட்டது
திருச்சி, ஜூலை. 22-
 
ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்ட நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
 
இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரம் தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டு ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
 
ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை யேவஸ்திரம் உள்பட மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
முன்னதாக நேற்று மாலையே ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது.
 
அதனையொட்டி ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மற்றும் கோவில் அலுவலர்கள் ஆகியோர் பட்டு வஸ்திரம், மாலை கள், பழவகைகள் உள்பட மங்கள பொருட்களை கையில் ஏந்தியவாறு யானை முன்னே செல்ல மேளதாளங்கள் முழங்க கோவில் ரெங்கவிலாச மண்டபத்தில் இருந்து ஊர்வலமாக புறப் பட்டு ரெங்கா, ரெங்கா கோபுரம் வரை கொண்டு சென்றனர்.
 
பின்னர் அங்கு இருந்து மறுபடியும் கோவிலுக்குள் ஊர்வலமாக வந்தனர். இன்று அதிகாலையே ஸ்ரீவில் லிபுத்தூருக்கு சீர்வரிசை கொண்டு செல்லப்பட்டன. இந்த வஸ்திரம் உள்பட மங்கள பொருட்கள் அடங்கிய சீர்வரிசை இன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கப்படுகிறது.
 
நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத்தின்போது ஸ்ரீரங்கம் கோவில் வஸ்திரங்களை அணிந்து ஆண்டாள் வீதி உலா வருகிறார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருச்சி

section1

ஆந்திர அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி மாநாட்டில் தீர்மானம்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் இன எழுச்சி அரசியல் மாநாடு நேற்று நடந்தது. ....»