பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்: ஜி.கே.மணி பேட்டி || public filed case withdraw GK mani
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்: ஜி.கே.மணி பேட்டி
பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும்: ஜி.கே.மணி பேட்டி
சேலம், ஜூலை 22-

சேலம் அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் கோவில் திருவிழா நடந்தது. இதில் எருதாட்டம் நடத்த அனுமதி கேட்டனர். ஆனால் இதற்கு அனுமதி தரவில்லை. இதனால் பக்தர்களும், பொதுமக்களும் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலைமறியல் செய்தனர். டயர் மற்றும் பொருட்களுக்கு தீவைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைய வைத்தனர். இதில் போலீசாரும், பொதுமக்களும் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து 79 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடுத்து நெய்க்காரப்பட்டியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இப்போது இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 15 போலீசார் மட்டும்நின்று கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நெய்க்காரப்பட்டிக்கு நேற்று பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜி.கே.மணி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வந்து பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அப்போது திரளான பொதுமக்கள் அவரிடம் வந்து எருதாட்டம் நடத்த போலீசார் அனுமதி தராமல் அடித்து காயப்படுத்தி விட்டனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் காயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர்.

இவர்களுக்கு அவர் ஆறுதல் கூறி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியதாகும். பலர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ் பெறவேண்டும். சிறையில் உள்ள அனைவரும் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சேலம்

section1

வாழப்பாடி அருகே மாரியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை

வாழப்பாடி, பிப்.13–சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை அடுத்த கந்தரபிள்ளை வலசு ஊராட்சி பள்ளத்தாதனூர் கிராமத்தில் பழமையான ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif