முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன் தம்பி தற்கொலை: போலீசார் விசாரணை || ex congress mla ksk rajjendran brother susicide police enquiry
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை லலிதாவுக்கு வெள்ளி
  • லிபியாவின் முன்னாள் துணை பிரதமர் கடத்தல்
  • காமன்வெல்த்: ஹாக்கி காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா
  • சகரான்பூர் கலவரத்துக்கு காரணமான 6 முக்கிய குற்றவாளிகள் கைது
  • இஸ்ரேல் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 1,321 ஆக உயர்வு
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரன் தம்பி தற்கொலை: போலீசார் விசாரணை
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.
கே.எஸ்.கே. ராஜேந்திரன் தம்பி தற்கொலை: போலீசார் விசாரணை
மதுரை, ஜூலை. 22-

மதுரை செல்லூர் கீழதோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 38). பைனான்சியரான இவர் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே. ராஜேந்திரனின் தம்பி ஆவார்.

கணேசனின் மனைவி மற்றும் குழந்தைகள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்லூர் அருகே உள்ள மீனாட்சிபள்ளத்திற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் இன்று காலை கணேசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவரது தந்தை கல்யாணதேவர் கதறி அழுதார். இச்சம்பவம் குறித்து செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - மதுரை