கோர்ட் அனுமதி கிடைத்ததும் சென்ட்ரல் எதிரில் உள்ள 63 கடைகளும் அகற்றப்படும் || central railway station opposit shop remove get permission court
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
கோர்ட் அனுமதி கிடைத்ததும் சென்ட்ரல் எதிரில் உள்ள 63 கடைகளும் அகற்றப்படும்
கோர்ட் அனுமதி கிடைத்ததும் சென்ட்ரல் எதிரில் உள்ள 63 கடைகளும் அகற்றப்படும்
சென்னை, ஜூலை.22-
 
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிக்காக பல்வேறு இடங்கள் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டன. அதில் உள்ள கடைகள், வீடுகள் உள்பட கட்டிடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டு வருகிறது.
 
சென்ட்ரல், ரிப்பன் மாளிகை அருகில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கி உள்ளன. ரிப்பன் மாளிகை வளாகம், விக்டோரியா ஹால் வளாகம், சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகங்களில் பணிகள் நடந்து வருகிறது.
 
சென்ட்ரல் எதிரில் அரசால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ள கடைகளை ஒரு மாதத்தில் காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுத்து இருந்தனர். ஆனால் கால அவகாசம் போதாது என்று கடை உரிமையாளர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோரட் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியது. அந்த காலக்கெடுவும் நேற்று முன்தினம் முடிந்தது.
 
இதையடுத்து கடைகளுக்கு நேற்று அதிகாரிகள் சீல் வைத்தனர். குடிநீர், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த கடைக்காரர்கள் மேலும் 10 நாள் அவகாசம் கேட்டனர். ஆனால் அதிகாரிகள் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மறுத்துவிட்டனர்.
 
இதற்கிடையில் கட்டிட உரிமையாளர் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பால்வசந்தகுமார் வருகிற 24-ந்தேதி இடைக்கால தடைவிதித்து தீர்ப்பு கூறினார். இதனால் கட்டிடங்களை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பகுதியில் பூங்கா ரெயில் நிலையத்துக்கு செல்லும் பகுதி மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரத்தில் பல கடைகள் உள்ளன. முன்னணி சைவ ஓட்டல் மற்றும் அசைவ ஓட்டல் உள்பட 63 கடைகள் இடிக்கப்பட உள்ளன.
 
7 மாடிகளை கொண்ட ஓட்டலை கேரளாவை சேர்ந்த அப்துல் ரகுமான் கோயா என்பவர் நடத்தி வருகிறார். அவர் கூறும்போது, 2037 வரை இந்த இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளேன். இந்த இடத்தில் ரூ.16 கோடி முதலீடு செய்துள்ளேன் என்றார்.
 
விரைவில் சென்ட்ரலில் அமையவிருக்கும் சுரங்க ரெயில் நிலையத்திற்கு பயணிகள் செல்லும் வழி இந்த பகுதியில்தான் அமைகிறது. எனவே கட்டுமான பணிகளுக்காக அரசு கையகப்படுத்திய இடங்களில உள்ள கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கோர்ட் தடை காரணமாக பணிகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது. 24-ந்தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.
 
தமிழக அரசு மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவனம் கோர்ட் உத்தரவுக்காக காத்திருக்கிறது. கோர்ட் அனுமதி கிடைத்ததும் 63 கடைகளும் இடித்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்துகிறது: பா.ஜ.க

மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்த போது நிலம் வழங்கியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. காங்கிரஸ் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif