முன்னாள் தீவிரவாதிகள் அடித்துக் கொலை: அசாமில் கலவரம் 9 பேர் படுகொலை || former terrorist murder assamn riot 9 person killed
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து வந்த பெண் பயணியிடம் 2 கிலோ தங்கம் பறிமுதல்
  • பீகார் மாநிலம் அருகே சாசாராமில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பலி
முன்னாள் தீவிரவாதிகள் அடித்துக் கொலை: அசாமில் கலவரம்- 9 பேர் படுகொலை
முன்னாள் தீவிரவாதிகள் அடித்துக் கொலை: அசாமில் கலவரம்- 9 பேர் படுகொலை
கவுகாத்தி, ஜூலை. 22-
 
அசாம் மாநிலம் கோக் ராஜ்கர் மாவட்டம் ஜெயபூர் கிராமத்தில் போடோ மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 4 வாலிபர்களை ஒரு கும்பல் அடித்துக் கொன்றது. பலியான 4 பேரும் போடோ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தொண்டர்கள் ஆவார்கள். அந்த இயக்கம் தடை செய்யப்பட்டதால் அதன் தொண்டர்கள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திக்கொண்டனர்.
 
இவர்கள் கொலை செய்யப்பட்டதால் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் கலவரம் பரவியது. பல்வேறு இடங்களில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். துப்பாக்கியாலும் சுட்டனர். தீவைப்பு சம்பவங்களும் நடந்தன.
 
மாணவர்களும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த 2 நாட்கள் நடந்த கலவரத்தில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
 
கோக்ராஜ்கர் மாவட்டத்தில் பதட்டம் நிலவுவதால் பாதுகாப்புக்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையும் வர வழைக்கப்பட்டுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்ததில் இந்திய விஞ்ஞானிகளுக்கு பங்கு

ஜெர்மனியை சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவர் 1905-ம் ஆண்டு, ஏப்ரல் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif