சென்னையில் வாந்தி பேதியால் மேலும் 9 பேர் பாதிப்பு: கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி || chennai 9 person impact cholera admited kilpauk hospital
Logo
சென்னை 04-03-2015 (புதன்கிழமை)
சென்னையில் வாந்தி பேதியால் மேலும் 9 பேர் பாதிப்பு: கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னையில் வாந்தி பேதியால் மேலும் 9 பேர் பாதிப்பு: கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதி
சென்னை, ஜூலை. 22-
 
சென்னையில் பல்வேறு இடங்களில் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சிகிச்சை பெற்றவர்களில் ஒரு பெண் நேற்று பலியானார். சிலரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு காலரா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே 27 பேர் வாந்தி பேதிக்கு சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் 9 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
 
இன்று காலை நிலவரப்படி அங்கு 36 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டு கீழ்ப்பாக்கம் பகுதியில் தண்ணீரில் குளோரின் கலக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு மாத்திரை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
 
தண்டையார் பேட்டை ஆஸ்பத்திரியில் 30-க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி  பேதியால் பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆஸ்பத்திரிக்குள் நோயாளிகள், உறவினர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை. 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஊத்துக்கோட்டையில் இடியுடன் பலத்த மழை

ஊத்துக்கோட்டையில் நேற்று மதியம் வெயில் சுட்டெரித்தது. மாலை 5.30 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif