எனது இறப்புக்கு பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்வேன்: நடிகர் மோகன்லால் பேட்டி || Donate organs actor mohanlal interview
Logo
சென்னை 03-07-2015 (வெள்ளிக்கிழமை)
  • மொபைல் நம்பர் மாறாமல் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் புதிய வசதி இன்று முதல் அமல்
  • நாகை: கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
  • சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவு
  • ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரின் காவல் 4-வது முறையாக நீட்டிப்பு
  • ராஜஸ்தானில் பள்ளி பஸ் மீது மின்சாரம் ஓயர் அறுந்து விழுந்து விபத்து- பல மாணவர்கள் காயம்
  • முல்லைப்பெரியாறு அருகே புதிய அணை கட்டும் விவகாரத்தில் கேரளா அரசுக்கு நோட்டீஸ்
  • அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு
எனது இறப்புக்கு பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்வேன்: நடிகர் மோகன்லால் பேட்டி
எனது இறப்புக்கு பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்வேன்: நடிகர் மோகன்லால் பேட்டி
திருவனந்தபுரம், ஜூலை. 22-

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடிகர் மோகன்லாலின் தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத்தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து கவனித்து வரும் நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளையும் சந்தித்து பேசினார். அப்போது கொச்சியை அடுத்துள்ள குற்றியரையை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

தற்போது சுவாதி கிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து ஆறுதல் கூறிய மோகன்லால் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இன்னொரு பெண்ணான கிருஷ்ணன்குட்டியின் மனைவி ரெய்னியையும் சந்தித்தார். அப்போது ரெய்னிக்கு அவர் ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து நிருபர்களிடம் நடிகர் மோகன்லால் கூறியதாவது:-

உடல் உறுப்பு தானம் என்பது மகத்துவமானதாகும். ஒருவர் இறந்து போன பின்பு அழியும் உடல் உறுப்புகளை இன்னொருவர் உயிர் வாழ தானம் செய்யும் குணம் கொண்டவர்கள் புண்ணிய வான்கள். இன்று மருத்துவத்துறையில் அறிவியலின் முன்னேற்றத்தால் உடல் உறுப்பு தானம் முதல் உயிர் வாழ்வதற்கு தேவையான என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ? அவை அனைத்தையும் மருத்துவர்கள் தாங்கள் முயற்சியால் மேற் கொள்கிறார்கள்.

இந்த ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எனது தாயார் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் சிகிச்சை பெறும் பலரையும் பார்த்தேன். ஒவ்வொருவரிடமும் உயிர் வாழ்வதற்கான வேட்கை உள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுவாதி என்ற பெண் உற்சாகமாக காணப்படுகிறார். அவருக்கு இருதயம் தானம் செய்த பெண் கடவுளால் ஆசீர்வாதிக்கப்பட்டவர்.

நானும் எனது இறப்புக்கு பின்பு கண், சிறுநீரகம், இருதயம் போன்ற உடல் உறுப்புகளை தானம் செய்வேன். இதற்கான உறுதி மொழி பத்திரத்தை விரைவில் எழுத உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் சிறுமி பலி: டிரைவர் கைது

நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ....»