Logo
சென்னை 22-05-2013 (புதன்கிழமை)
ஜீன்ஸ் அணிந்ததால் தங்கையை சுட்டு கொன்ற போலீஸ்காரர்
லாகூர், ஜூலை 22-
 
பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் ஆசாத் அலி. இவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஆக பணி புரிகிறார். இவரது தங்கை நஜ்மா பீபி(22). நவநாகரீகமாக ஆடை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம் உண்டு. இது போலீஸ்காரர் ஆசாத் அலிக்கு பிடிக்கவில்லை.
 
இதுபோன்று உடை அணியக் கூடாது என கண்டித்தார். இருந்தும் நஜ்மா பீபி கேட்கவில்லை. தான் விரும்பிய படியே உடை அணிந்து சுற்றி திரிந்தார். சம்பவத்தன்று நஜ்மா பீபி ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வெளியே சென்று வந்தார். இதைப்பார்த்த ஆசாத் அலிக்கு கோபம் ஏற்பட்டது. ஆண்கள் அணியும் ஆடையை தங்கை அணிந்ததால் ஆத்திரம் அடைந்த அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டார். அதில் குண்டு பாய்ந்து நஜ்மா பீபி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் லாகூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

சீனா: வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து - 13 பேர் பலி

கிழக்கு சீனாவின் ஷண்டாங் மாகாணம், கவ்பான் நகரில் அரசுக்கு சொந்தமான வெடிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 163 ....»

Recommendations
Recent Activity