ரோட்டில் குழந்தை பெற்ற பெண்: பெண்கள் சுற்றி நின்று பிரசவம் பார்த்தனர் || girl child road Pregnant women standing around baby birth
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
ரோட்டில் குழந்தை பெற்ற பெண்: பெண்கள் சுற்றி நின்று பிரசவம் பார்த்தனர்
ரோட்டில் குழந்தை பெற்ற பெண்: பெண்கள் சுற்றி நின்று பிரசவம் பார்த்தனர்
சென்னை, ஜூலை. 20-

சென்னை தலைமை செயலகத்தை அடுத்த போர் நினைவுச் சின்னம் அருகில் சத்யாநகர் குடிசைப்பகுதி உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மோகன். இவரது மனைவி முத்துமாரி (வயது 26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மோகன் அவரை திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். வலியால் துடித்த முத்துமாரியை பக்கத்து வீட்டு பெண்கள் சிலர் உதவியுடன் ரோட்டிற்கு அழைத்து வந்தார். ஆட்டோவுக்காக நீண்ட நேரம் காத்து நின்றனர். அந்த வழியாக ஆட்டோ எதுவும் வரவில்லை. 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கிருந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் முத்துமாரிக்கு குழந்தை பிறப்பதற்கான அறிகுறி ஏற்பட்டது. குடிசைப் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி முத்துமாரியை சுற்றி வளையமாக நின்றனர். அவர்களில் 5 பேர் முத்துமாரிக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தாயையும், குழந்தையையும் ஆஸ்பத்திரியில் கொண்டு செல்ல முயலும் போது ஆம்புலன்ஸ் வந்தது. அதில் அவர்களை ஏற்றி கஸ்துரிபாய் காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

section1

விவேகானந்தரின் போதனைகளை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்: தருண்விஜய் எம்.பி. கோரிக்கை

சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லம் சார்பில் விவேகானந்த நவராத்திரி மற்றும் தெய்வீக புத்தகத் திருவிழா நேற்று ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif