இந்தியா 21 ரன்னில் வெற்றி: இர்பான் பதானுக்கு டோனி பாராட்டு || first one day cricket india win dhoni wishes to irfan pathan
Logo
சென்னை 02-12-2015 (புதன்கிழமை)
  • நாகை, திருவண்ணாமலையில் நாளை பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
  • வெள்ள பாதிப்பு குறித்து ஜெயலலிதாவிடம் கேட்டறிந்த மோடி: முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி
  • சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக ஓடுபாதை மூடப்பட்டது - விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டன
இந்தியா 21 ரன்னில் வெற்றி: இர்பான் பதானுக்கு டோனி பாராட்டு
இந்தியா 21 ரன்னில் வெற்றி: இர்பான் பதானுக்கு டோனி பாராட்டு
ஹம்பன்டோடா, ஜூலை. 22-
 
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன்னில் வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:-
 
ரவீந்திர ஜடேஜா, யுவராஜ்சிங் இல்லாததால் ஆல் ரவுண்டர் வரிசை இடத்தை நிரப்புவது கடினம் என்று நினைத்தேன். இர்பான் பதான் அதற்கு பொருத்தமானவர். அவரது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீரர்கள் அனுபவம் மூலம் பாடங்களை கற்றுக் கொண்டனர். ஜாகீர்கான் பந்துவீச்சு தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது. கடைசி ஓவர்களில் ரன்களை வாரி கொடுத்தார். அதில் அவர் மேம்பட வேண்டும்.
 
இவ்வாறு டோனி கூறினார்.
 
தோல்வி குறித்து இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே கூறியதாவது:-
 
எங்கள் அணி வீரர்கள் செய்த தவறால் தோல்வி அடைந்தோம். சிறந்த அதிரடி பேட்ஸ்மேன்கள் எங்கள் அணியில் உள்ளனர். ஆனால் அவசரப்பட்டு ஆடி எளிதில் ஆட்டம் இழந்து விட்டனர். அதிகமான தவறுகளை செய்து விட்டோம். இந்திய அணி எங்களை விட எல்லா வகையிலும் சிறப்பாக ஆடியது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது போட்டி வருகிற 24-ந்தேதி இதே ஹம்பன்டோடாவில்தான் இந்த போட்டியும் நடக்கிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif