சீனியர் வீரர்கள் பற்றி டோனி கவனத்துடன் கருத்து சொல்ல வேண்டும்: அசாருதீன் வலியுறுத்தல் || Senior players opinion dhoni mohammad azharuddin
Logo
சென்னை 20-12-2014 (சனிக்கிழமை)
  • திருப்பதியில் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியன்று இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி
  • மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: டெல்லி கோர்ட்டு உத்தரவு
  • தமிழக மீனவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் விடுவிக்க பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
சீனியர் வீரர்கள் பற்றி டோனி கவனத்துடன் கருத்து சொல்ல வேண்டும்: அசாருதீன் வலியுறுத்தல்
சீனியர் வீரர்கள் பற்றி டோனி கவனத்துடன் கருத்து சொல்ல வேண்டும்: அசாருதீன் வலியுறுத்தல்
புதுடெல்லி, ஜூலை. 22-

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் டோனிக்கும், ஷேவாக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வருகிறது. வீரர்களின் அறையில் நடந்த சம்பவம் தற்போது வெளியே தெரியும் அளவுக்கு விவகாரமாகி விட்டது. ஆஸ்திரேலிய பயணத்தின் போது டோனி - ஷேவாக் இடையே ஏற்பட்ட கருத்து வெளியே தெரிந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே வீரர்கள் பற்றி டோனி கவனத்துடன் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார். டெலிவிசன் ஷோ ஒன்றில் பங்கேற்ற அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

டோனி அணியில் உள்ள சக வீரர்கள் மனதை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க கூடாது. கருத்து தெரிவிக்கும் அவர் மிகவும் கவனத்துடன் சொல்ல வேண்டும். பெரும்பாலான சீனியர் வீரர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஏற்கனவே விளையாடி உள்ளனர். அவரது சில கருத்துக்கள் நன்மதிப்பை பாதித்து விடும்.

தெண்டுல்கர் ஆடாததால் ஷேவாக், காம்பீர் தொடக்க ஜோடிக்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே ஷோவில் கலந்து கொண்ட முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறும்போது, தற்போது ஆடக்கூடிய வீரர்களின் மனநிலை முற்றிலும் மாறுபட்டது. டோனியாக இருந்தாலும் சரி, ஷேவாக்காக இருந்தாலும் சரி தங்களுக்கு உள்ள கவுரவ பிரச்சினையை மறந்து நாட்டுக்காக ஆடுவதே முக்கியம் என்பது உணர வேண்டும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

இந்திய கிரிக்கெட் வாரியம் மீது 213 சேவை வரி ஏய்ப்பு வழக்கு: மத்திய மந்திரி தகவல்

இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.பி.எல். அமைப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்தியது தொடர்பாக வரி ஏய்ப்பு மற்றும் ....»