அமெரிக்க திரையரங்கில் 12 பேரை சுட்டுக் கொன்ற ஆசாமி வீட்டில் தொட்டாலே வெடிக்கும் பயங்கர குண்டுகள் || amarica theatre 12 people shot person home touch blast terror bomb
Logo
சென்னை 29-12-2014 (திங்கட்கிழமை)
அமெரிக்க திரையரங்கில் 12 பேரை சுட்டுக் கொன்ற ஆசாமி வீட்டில் தொட்டாலே வெடிக்கும் பயங்கர குண்டுகள்
அமெரிக்க திரையரங்கில் 12 பேரை சுட்டுக் கொன்ற ஆசாமி வீட்டில் தொட்டாலே வெடிக்கும் பயங்கர குண்டுகள்

அரோரா, ஜூலை.22-


அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில், டென்வர் புறநகர் அரோராவில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் பேட்மேன் வரிசையில் வெளிவந்துள்ள தி டார்க் நைட் ரைசஸ் என்ற படம் வெளியாகி இருக்கிறது. கடந்த 19-ந் தேதி நள்ளிரவில், அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு முகமூடி ஆசாமி திரையரங்கினுள் நுழைந்தான். கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடிக்கச்செய்து, அந்தப் புகை மூட்டத்துக்கு மத்தியில் படம் பார்த்துக்கொண்டிருந்தவர்களை சரமாரி எந்திரத் துப்பாக்கியால் சுட்டான்.

இந்த சம்பவத்தில் 12 பேர் பலியானார்கள். 58 பேர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள இந்த சம்பவத்தை அரங்கேற்றிய ஆசாமி ஜேம்ஸ் ஹோம்ஸ் என்ற 24 வயது ஆசாமி ஆவான். அவனை உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து துப்பாக்கியை கைப்பற்றினர்.

அவனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவன் சம்பவம் நடந்த திரையரங்கிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் 3-வது தளத்தில் அமைந்துள்ள அவனது வீட்டில் தொட்டாலே வெடிக்கக்கூடிய ஏராளமான வெடிபொருட்களை, வெடிபொருட்கள் அடங்கிய நவீன கருவிகளை குவித்து வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, விபரீத சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் தடுக்கும் விதத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஜேம்ஸ் ஹோம்ஸ் தனது வீட்டில் வெடிபொருட்கள் பொருத்திய கருவிகள் ஆகியவற்றுடன் ஒரு டைமரில் ஆடியோ கருவி ஒன்றை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, குறித்த நேரத்தில் டைமரில் பொருத்தப்பட்டுள்ள அந்த ஆடியோ கருவியில் இருந்து பலத்த சத்தம் வெளிவரும், அது என்ன என்று அறிவதற்காக அக்கம்பக்கத்தினர் உள்ளே நுழைகிறபோது, அவர்கள் உள்ளே நுழைந்து வெடிகருவிகளை அவர்களை அறியாமல் அழுத்தி விடுகிறபோது, அவை வெடித்து பெருத்த உயிர்ச்சேதத்துக்கு வழி வகுக்கும், இதனால் பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பது ஜேம்ஸ் ஹோம்சின் சதித்திட்டம் என தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் அரோரா நகர் போலீஸ் தலைவர் டேனியல் காட்ஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
தொட்ட உடனே வெடிக்கிற வெடிபொருட்களை தன் வீட்டில் ஜேம்ஸ் ஹோம்ஸ் குவித்திருக்கிறான். தீப்பற்றி எரியக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய அவற்றை எப்படி அழிப்பது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் மணிக்கணக்கில், நாட்கணக்கில் இங்கு இருக்க வேண்டி உள்ளது. எப்படி அவன் தொட்டவுடன் வெடிக்கத்தக்க வெடிபொருட்களை குவித்துள்ளான் என்பது குழப்பமாக உள்ளது. அவன் குவித்து வைத்துள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டு முறைப்படி வாங்கியதாக இருக்க வேண்டும் என்றுதான் கருதுகிறேன்.

4 துப்பாக்கிகளை அவன் உள்ளூர் துப்பாக்கி கடைகளில் கடந்த 60 நாளில் வாங்கி இருக்கிறான். 6 ஆயிரம் தோட்டாக்களையும் வாங்கிக் குவித்திருக்கிறான்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே ஜேம்ஸ் ஹோம்சின் வீட்டின் முன் அறைக்கு ஜன்னல்கள் வழியாக கேமிராக்களை செலுத்தி, படம் பிடிக்கப்பட்டுள்ளது. அதில், பல பாட்டில்களில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற திரவங்களை வைத்து அவற்றை வயர்களுடன் இணைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவற்றுடன் எண்ணற்ற, இனம் தெரியாத சாதனங்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.

ஜேம்ஸ் ஹோம்ஸ் குவித்து வைத்துள்ள வெடிபொருட்கள், சாதனங்களை வெடிக்கச்செய்து அழிப்பதற்கு எந்திர மனிதனை (ரோபாட்) பயன்படுத்துவது குறித்து போலீசாரும், தீயணைப்பு படையினரும் தீவிர பரிசீலனை செய்து வருகின்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ....»