சிறுவனின் இதயத்தில் கூடுதலாக இருந்த அறை நீக்கம்: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சாதனை || boy heart addition hole removel egmore government child hospital record
Logo
சென்னை 07-10-2015 (புதன்கிழமை)
சிறுவனின் இதயத்தில் கூடுதலாக இருந்த அறை நீக்கம்: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சாதனை
சிறுவனின் இதயத்தில் கூடுதலாக இருந்த அறை நீக்கம்: எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சாதனை
சென்னை, ஜூலை.22-


சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் டீன் வே.கனகசபை, எழும்பூரில் உள்ள அரசு குழந்தை நல மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பி.மூர்த்தி ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில் 2 குழந்தைகளுக்கு அரிதான இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதில் தஞ்சாவூர் அரண்மனை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன்-கனகவல்லி ஆகியோரின் மகன் ஹேராம் (வயது 7). அவனுக்கு 5 மாதத்தில் இருந்து கடுமையான சளி, காய்ச்சல் போன்ற நோயால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்துள்ளான். இதையடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில், இதயத்தில் இருக்கும் 4 அறைகளுக்கு பதிலாக 5 அறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சிறுவன் ஹேராமுக்கு, திறந்தவெளி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தேவையில்லாமல் இருந்த கூடுதல் அறை நீக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட ஓட்டையும் அடைக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகள் லட்சத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும்.

இதே போல் சேலம் லைன்மேடு பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர்-சுல்தானா தம்பதியரின் ஒரே மகள் ஷாஜிதா (8) என்ற சிறுமிக்கு இதயத்தில் இருந்து ரத்தக்குழாய் வழியாக கால்களுக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டிருந்தது.

இதனால் அந்த சிறுமிக்கு அடிக்கடி காலில் வலி ஏற்பட்டது. இந்த நோய் முற்றினால் காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். அந்த சிறுமிக்கு இதய பகுதியில் குழாயின் அடைப்பு நீக்கி, காலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாயில் இணைப்பு ஏற்படுத்தி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சிறுமிக்கு ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு இதயத்தில் இருந்த ஓட்டை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், குழந்தைகளுக்கான இதயவியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை துறையை உலகதரம் வாய்ந்த சிறப்பு மையமாக தரம் மேம்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான அரசாணை சமீபத்தில் பெறப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு ரூ.25 கோடி நிதியை முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார்.

இந்த தொகையில் ரூ.5 கோடியில் கட்டிடப்பணிகளும், ரூ.16 கோடியில் இதய அறுவை சிகிச்சை துறைகளுக்கு பல்வேறு புதிய நவீன உபகரணங்களும், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 49 பதவிகளுக்கு பணியாளர்கள் நியமிக்க அனுமதி கிடைத்துள்ளது. அவர்களுக்கு ஊதியம் போன்றவை வழங்க ரூ.2 கோடியும் செலவிடப்பட உள்ளது என்றனர்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் 19 மாவட்டங்களில் இன்று முதல் 2-ம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தில் காசநோய், போலியோ, மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ....»

VanniarMatrimony_300x100px_2.gif