தட்கல் ரெயில் டிக்கெட் பொது மக்களுக்கு தாராளமாக கிடைக்கிறது: ரெயில்வே அதிகாரிகள் தகவல் || tatkal train ticket public freely avilable railway officers informed
Logo
சென்னை 30-05-2015 (சனிக்கிழமை)
தட்கல் ரெயில் டிக்கெட் பொது மக்களுக்கு தாராளமாக கிடைக்கிறது: ரெயில்வே அதிகாரிகள் தகவல்
தட்கல் ரெயில் டிக்கெட் பொது மக்களுக்கு தாராளமாக கிடைக்கிறது: ரெயில்வே அதிகாரிகள் தகவல்
சென்னை, ஜூலை.22-
 
தட்கல் ரெயில் டிக்கெட் எடுப்பதில் சில கட்டுப்பாடுகளுடன் புதிய முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தினமும் ஒரு லட்சம் பயணிகள் வரை தட்கல் டிக்கெட் பெறுகிறார்கள்.
 
தட்கல் முறையில், ரெயில் முன்பதிவு டிக்கெட் எடுப்பதில் நீண்டகாலமாக பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இதை முற்றிலுமாக தடுக்க ரெயில்வே நிர்வாகம் கடந்த 10-ந் தேதி புதிய முறையை அமல்படுத்தியது. அதன்படி, ரெயில் நிலையங்களில் உள்ள கணினி முன்பதிவு மையத்தில் காலை 8 மணிக்கு பதிலாக 10 மணிக்குத்தான் தட்கல் முன்பதிவு தொடங்கும். தட்கல் டிக்கெட் எடுப்பதற்காக தனியாக கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.
 
இந்த கவுண்ட்டர்களில் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை தட்கல் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், இந்தியன் ரெயில்வே உணவகம் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.), ரெயில் டிராவல் சர்வீஸ் ஏஜெண்டுகள் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டிராவல் ஏஜெண்டுகள் ஆகியன பகல் 12 மணி வரை தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது.
 
இந்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக தட்கல் டிக்கெட் பொது மக்களுக்கு கிடைப்பது அதிகரித்துள்ளது. புதிய நேரத்துடன் (காலை 10 மணி) தட்கல் டிக்கெட் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தினமும் ஒரு லட்சம் பொது மக்களுக்கு தட்கல் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன என்று ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
 
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் தினமும் சராசரியாக பொது மக்களுக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் தட்கல் டிக்கெட்டுகள் விற்பனையானது. புதிய முறை அமல்படுத்தப்பட்ட பிறகு தினமும் சராசரியாக 4 லட்சத்து 47 ஆயிரம் பயணிகள் தட்கல் டிக்கெட் பெறுகிறார்கள்.
 
இதே போல் இந்தியன் ரெயில்வே இணையதளத்திலும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் பொது மக்களுக்கு தட்கல் டிக்கெட் விற்பனை கணிசமாக அதிகரித்து உள்ளது. இதற்கு முன்பு ரெயில் நிலையங்களில் உள்ள கணினி முன்பதிவு மையத்தில் டிக்கெட் எடுப்பதிலும், இணையதளத்தில் இ-டிக்கெட் எடுப்பதிலும் டிராவல் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அதாவது, முன்பதிவு மையங்களில் டிராவல் ஏஜெண்டுகளின் பையன்கள் அதிகாலையிலேயே முன்பதிவு மையத்தில் முதல் ஆளாக காத்துக் கிடந்து டிக்கெட் எடுத்துவிடுவார்கள். அதனால் பொதுமக்களுக்கு சாதாரண டிக்கெட்டும், தட்கல் டிக்கெட்டும் கிடைக்காமல் போனது.
 
இ-டிக்கெட்டை பொறுத்தவரை ஏஜெண்டுகள், பலரது பெயரில் இணையதள முகவரியை தொடங்கி, அதன்மூலம் ரெயில் டிக்கெட் எடுத்து, அதனை கூடுதல் விலைக்கு விற்று கொள்ளை லாபம் அடித்தார்கள் என்று பயணிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
 
தட்கல் டிக்கெட்டில் புதிய முறை அமல்படுத்தப்பட்டு விட்டதால், ஒருவர் பலரது பெயர்களில் இணையதள முகவரி வைத்துக்கொண்டு தட்கல் டிக்கெட் எடுப்பதும், ஏஜெண்டுகள் தனிப்பட்ட நபர்களின் இணையதள முகவரியைப் பயன்படுத்தி டிக்கெட் எடுத்து விற்றதும் முற்றிலுமாக தடுக்கப்பட்டு உள்ளது.
 
இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக 5 லட்சம் இணையதள முகவரிகளும், டிராவல் ஏஜெண்டுகளின் 40 ஆயிரம் இணையதள முகவரிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஒரு ரெயில் புறப்படுவதற்கு 120 நாட்களுக்கு முன்பு ரெயில் முன்பதிவு டிக்கெட் எடுக்கலாம். இதனை ஓபனிங் டே என்று சொல்வார்கள்.
 
இந்த நாளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், தட்கல் முன்பதிவு தொடங்கும் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் ஏஜெண்டுகள் சாதாரண டிக்கெட்டோ அல்லது தட்கல் டிக்கெட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் பெருமளவு குறைந்திருக்கிறது என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
 
முறைகேடுகளைத் தடுப்பதற்கான ஐ.ஆர்.சி.டி.சி.யின் கண்காணிப்பு பிரிவு, தினமும் எடுக்கப்படும் முன்பதிவு டிக்கெட்டுகளை சரிபார்த்து வருகிறது. சந்தேகப்படும்படியான டிக்கெட்டுகளை ரத்து செய்து, விசாரணையும் நடத்துகின்றது. ரெயில் டிக்கெட் எடுப்பதில், முன்எப்போதும் இல்லாத அளவுக்கு கெடுபிடி அதிகரித்திருப்பதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தேசிய அளவில் ஜூன் 24ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

அரசு வங்கி ஊழியர் சங்கத்திடம்(SSBEA) முன்வைத்துள்ள பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்த வலியுறுத்தி வருகிற ஜூன் ....»

MM-TRC-Set2-B.gif