ஐக்கிய முற்போக்கு கூட்டணி ‘மூழ்கும் படகு’: நிதின் கட்காரி வர்ணனை || united progressive alliance sink the boat nitin katkari commentary
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ‘மூழ்கும் படகு’: நிதின் கட்காரி வர்ணனை
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ‘மூழ்கும் படகு’: நிதின் கட்காரி வர்ணனை

நாக்பூர், ஜூலை 21-


ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், மூழ்கும் நிலையில் உள்ள படகாக தத்தளிக்கும் அந்த கூட்டணியை, கூட்டணி கட்சிகள் கைவிடப் போகின்றன என்றும், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் இடையே உள்ள உரசல் குறித்து கருத்து தெரிவித்த கட்காரி இவ்வாறு அந்த கூட்டணியை கேலி செய்தார்.

நாக்பூரில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் கட்காரி மேலும் பேசியதாவது:-

காங்கிரசில் உயர் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருக்கிறார். என்ன பெரிய பொறுப்பு? அவர் ஏற்கனவே கட்சியில் உயர்ந்த இடத்தில்தான் இருக்கிறார். அதைவிட இனி என்ன வேறுபாடு இருக்கப்போகிறது?

பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினர், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பட்டய கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற தனியார் துறையினர் என 5 பிரிவுகளில் எங்கள் கட்சி கவனம் செலுத்தி வருகிறது. 

இவ்வாறு கட்காரி பேசினார்.

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

காதலர் தினம்: வெளிநாடுகளுக்கு விமானத்தில் பறக்கும் 50 லட்சம் ஓசூர் ரோஜாக்கள்

உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif