இந்தியா பாகிஸ்தான் வர்த்தக செயலாளர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு || Indo Pak Commerce Secy level talks likely in Sept
Logo
சென்னை 30-05-2015 (சனிக்கிழமை)
இந்தியா- பாகிஸ்தான் வர்த்தக செயலாளர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
இந்தியா- பாகிஸ்தான் வர்த்தக செயலாளர்கள் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு
ஐதராபாத், ஜூலை 21-
 
இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகத்துறை செயலாளர்கள் மட்டத்திலான உயர்மட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டு, செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும், செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள கூட்டத்தின்போது, சிறந்த சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என இந்திய வர்த்தகத்துறை செயலாளர் ராவ் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வர்த்தக செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கியது.
 
இதற்கிடையே ஏப்ரல் மாதம் இரு நாட்டு அமைச்சர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், இருநாடுகளுக்கு இடையிலும் தரை மார்க்கத்தில் மேலும் சுங்க சாவடிகளை நிறுவுதல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பெட்ரோலிய பொருட்கள் வர்த்தகம் மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக இருநாட்டு அதிகாரிகளும் வேகமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மாட்டிக் கொள்வோம் என்ற பயம்: ஆசிரியர்- பெற்றோர் கூட்டத்தை தடுக்க வெடிகுண்டு புரளியை கிளப்பிய 13 வயது மாணவன்

அரியானா தலைநகர் சண்டிகர் அருகேயுள்ள குருசேத்திரா பகுதியில் இருக்கும் தனியார் பள்ளிக்கு இன்று காலை வந்த ....»

MM-TRC-Set2-B.gif