முதலமைச்சரின் நடவடிக்கையில் தமிழகம் படிக்காதவர்களே இல்லாத மாநிலமாக மாறும்: எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேச்சு || tamilnadu chief minister action education people count increadsed
Logo
சென்னை 27-11-2015 (வெள்ளிக்கிழமை)
  • பிரேசிலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.4-ஆக பதிவு
  • டெல்லியில் ரூ.22.5 கோடியை வேனுடன் கடத்திய ஓட்டுநர் கைது
  • வெள்ள சேதங்களை பார்வையிட கடலூர் சென்றது மத்தியக்குழு
  • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்: டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு
  • ஐ.சி.சி. முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசனுடன் சுப்ரமணியன் சுவாமி சந்திப்பு
  • இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தடுமாற்றம்
முதலமைச்சரின் நடவடிக்கையில் தமிழகம் படிக்காதவர்களே இல்லாத மாநிலமாக மாறும்: எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேச்சு
முதலமைச்சரின் நடவடிக்கையில் தமிழகம் படிக்காதவர்களே இல்லாத மாநிலமாக மாறும்: எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. பேச்சு
கோவை,ஜூலை.21-
 
தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மானியம் மற்றும் பராமரிப்பு மானியம் வழங்கும் விழா அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொண்டாமுத்தூர் சட்டமன்ற எம்.எல்.ஏ. எஸ்.பி.வேலுமணி மானியங்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
முதலமைச்சர் அம்மாவின் பொற்கால ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற வகையில் ஏழை மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளில் மாணவர்ளுக்கு விலையில்லா சீருடை, காலணிகள், நோட்டு புத்தகங்கள், ஜாமிண்ட்ரி பாக்ஸ், மாணவிகளுக்கு சல்வார் கமிஸ் வழங்கப்படுகிறது.
 
2001-ம் ஆண்டு ஆட்சியிலேயே பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் வெகுதூரம் நடைபயணங்கள் மற்றும் பேருந்துகளில் கூட்டங்களில் நசுங்கி சிரமப்பட்டு செல்லும் சூழ்நிலையை மாற்றி மிதிவண்டி வழங்கியவர் அம்மா. மாணவர்கள் மேற்படிப்பு படிக்க ஊக்கத்தொகை என்று எண்ணற்ற பல திட்டங்களை வழங்கிவரும் அம்மா இனிவரும் காலங்களில் தமிழகத்தை படிக்காதவர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவார். இவ்வாறு அவர் பேசினார்.
 
விழாவில் ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜ், மாவட்ட கழக துணைசெயலாளர் செல்வதுரை, மாவட்ட கழக பொருளாளர் கருப்புசாமி, ஒன்றியகுழு பெருந்தலைவர் மதுமதி, தொகுதி கழக செயலாளர் விஜயகுமார், பேரூராட்சி கழக செயலாளர் சண்முகம், ஒன்றிய கழக துணைத்தலைவர் புரட்சிதம்பி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர், ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - கோவை