15 ஆண்டாக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட பெண் மன நோயாளி மீட்பு || 15 years metal patient rescue
Logo
சென்னை 01-11-2014 (சனிக்கிழமை)
15 ஆண்டாக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட பெண் மன நோயாளி மீட்பு
15 ஆண்டாக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட பெண் மன நோயாளி மீட்பு
திருப்பூர், ஜூலை. 21-
 
திருப்பூர் அருகேயுள்ளது ஆண்டிபாளையம். இங்கு கச்சேரி வீதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்ணை இரும்பு சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்துவதாக மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் வந்தது. அதன் பேரில் சமூக நல அதிகாரி தமிழரசி, தாசில்தார் பாலன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
 
அப்போது அந்த வீட்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் கடந்த 15 ஆண்டாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதும் வெளியே ஓடி விடக்கூடாது என்பதற்காக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
 
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை இப்படி கட்டி வைக்க கூடாது என்று அந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரருக்கு அதிகாரிகள் அறிவுரை கூறினர். பின்னர் சங்கிலியை அகற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
 
பெண் மீட்கப்பட்டது குறித்து சமூக நல அதிகாரி தமிழரசி கூறுகையில், தற்போது அந்த பெண்ணுக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநிலை மருத்துவமனை காப்பகத்தில் அவரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருப்பூர்

section1

திருப்பூரில் நடுரோட்டில் டிவி மெக்கானிக் குத்திக்கொலை: 4 பேருக்கு போலீஸ் வலை

திருப்பூர், நவ. 1–கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்மண்டியை சேர்ந்தவர் அக்கீம் (வயது 42). டி.வி. ....»