டால்மியாபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி || state level volleyball match in dalmiyapuram
Logo
சென்னை 27-11-2014 (வியாழக்கிழமை)
டால்மியாபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
டால்மியாபுரத்தில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
டால்மியாபுரம், ஜூலை. 21-
 
டால்மியா சிமெண்ட் நிறுவனம், டால்மியா மனமகிழ் மன்றம், திருச்சி மாவட்ட வாலிபால் சங்கம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான வாலிபால் போட்டி டால்மியாபுரத்தில் 20-ம் தேதி துவங்கி 22 ம் தேதி வரை 3 நாட்கள் டால்மியா மனமகிழ் மன்ற வளாகத்தில் நடைபெறுகிறது.
 
முதல் நாள் போட்டியினை டால்மியா சிமெண்ட் நிறுவன செயல் இயக்குனர் ஜே.வி. குங்குனே தலைமை தாங்கினார். போட்டியினை மாநில வாலிபால் சங்க துணைத் தலைவர் டாக்டர். தங்க பிச்சையப்பன் துவக்கி வைத்தார்.
 
டால்மியா சிமெண்ட் பொது மேலாளர் சிவக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். துவக்க விழாவில் கீழப்பழுர் செட்டிநாடு சிமெண்ட் ஆலைத்தலைவர் சுந்தரமூர்த்தி, டால்மியா சிமெண்ட் ஆலை துணை செயல் இயக்குனர் சாய் குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
 
முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் திருச்சி மாவட்ட போலீஸ் அணியும், திருச்சி ஜமால் முகமது அணியும், பெண்கள் பிரிவில் தஞ்சாவூர் கீங்ஸ் கல்லூரியும், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியும் விளையாடினர்கள். போட்டிக்கான ஏற்பாடுகளை டால்மியா சிமெண்ட் பொது மேலாளர்கள் நயினாராஜ், ஆன்சிகூரியன், சுடலைமுத்து, ராமமுர்த்தி, சுப்பையா, மோகன்தாஸ், ரமேஷ்பாபு மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ராமசந்திரன், மணிகண்டன் மற்றும் மனமகிழ் மன்றத்தினர் செய்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - திருச்சி

section1

வளநாடு அருகே தொழிலாளி விஷம்குடித்து தற்கொலை

மணப்பாறை, நவ.27–வளநாடு அருகே சின்ன அருளப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது38). இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு ....»