நெத்திமேடு கரிய பெருமாள் கரடில் மரத்தில் எலும்பு கூடாக தொங்கிய ஆண் பிணம்: புது மாப்பிள்ளையா? || nethimedu young man hanging suicide in tree
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
  • ரஷ்யாவிடம் இருந்து இயற்கை எரிவாயு வாங்குவதை நிறுத்துகிறது உக்ரைன்
  • சென்னையில் 24 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
நெத்திமேடு கரிய பெருமாள் கரடில் மரத்தில் எலும்பு கூடாக தொங்கிய ஆண் பிணம்: புது மாப்பிள்ளையா?
நெத்திமேடு கரிய பெருமாள் கரடில்  மரத்தில் எலும்பு கூடாக தொங்கிய  ஆண் பிணம்: புது மாப்பிள்ளையா?
சேலம், ஜூலை. 21-
 
சேலம் நெத்திமேட்டில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதன் பின் பகுதியில் கரியபெருமாள் கரடு உள்ளது. இந்த பகுதிக்கு அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அடிக்கடி ஜாலியாக சென்று வருவார்கள். தற்போது மழை பெய்ததால் மலை பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.
 
இந்நிலையில் இன்று காலை அன்னதானப்பட்டி போலீசுக்கு ஒரு போன் தகவல் வந்தது. அதில் பேசிய நபர் கரியபெருமாள் கரடு பகுதியில் ஒரு பிணம் தொங்குவதாக தெரிவித்தார்.
 
இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று தேடினர். அப்போது கீழ் இருந்து சுமார் 100 அடி உயரத்தில் அழுகிய துர்நாற்றம் வீசியது.
 
இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் எலும்பு கூடான நிலையில் ஒரு ஆண் பிணம் தொங்குவது தெரியவந்தது. பிணமாக கிடந்தவர் இறந்து 15 நாட்களுக்கும் மேலாக இருப்பது தெரியவந்தது. இதனால் தலை வயிறு, உள்ளிட் பகுதிகளில் இருந்து சதை அழுகி கீழே விழுந்து வெறும் எலும்பு கூடாக காட்சியளித்தது.
 
மேலும் கால் பகுதியில் பாதி சதை விழுந்த நிலையில், பாதி சதை தொங்கி கொண்டு இருந்தது. அதை காக்கா கொத்தியதால் துர்நாற்றம் வீசியது. பிணமாக கிடந்தவர் யார் என்று தெரியவில்லை. இந்த பகுதியில் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா? என்று போலீசார் விசாரித்தனர். அப்படி எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
 
எனவே பிணமாக கிடந்தவர் வெளியூரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அப்படியே இருந்தாலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தாலும் அவர்கள் இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டது ஏன் என்றும் தெரியவில்லை.
 
மேலும் யாராவது இவரை கடத்தி கொண்டு வந்து கொலை செய்து பிணத்தை மரத்தில் தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். முதலில் இறந்தவர் பற்றி தெரிந்தால்தான் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவரும் என்பதால் அவரைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
 
பிணம் தொங்கிய மரத்தின் கீழே ஒரு பை கிடந்தது. அந்த பையில் 2 புதிய பேண்டும், சட்டையும் இருந்தது. மேலும் தைக்காமல் புதிய பேண்ட் பிட்டும் இருந்தது. மணி பர்சில் 2 செல்போண் நம்பரும் இருந்தது. ஆனால் செல்போன் உடைக்கப்பட்டு கிடந்தது. அந்த போன் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மர்மமான முறையில் இறந்தவர் பட்டு வேட்டியால் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனால் அவர் புது மாப்பிள்ளையாக இருக்கலாமோ என்றும் போலீசாருக்கு எழுந்தது. இந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
கரியபெருமாள் கரட்டின் கீழ் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. ஒருவர் பிணமாக தொங்குவது பற்றி தெரியவந்ததும் அவர்கள் வேடிக்கை பார்க்க திரண்டனர். இதனால் அங்கு ஒரே பரபரப்பாக காணப்பட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - சேலம்