ஜனாதிபதி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை || Counting of Presidential poll votes tomorrow
Logo
சென்னை 26-11-2015 (வியாழக்கிழமை)
ஜனாதிபதி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
ஜனாதிபதி தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
புதுடெல்லி, ஜூலை 21-
 
இந்தியாவின் 14-வது ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், எதிர்க்கட்சிகள் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகளுடன் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.  வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது.
 
இதன் முடிவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட பிரணாப் முகர்ஜி, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமூல் காங்கிரசின் ஆதரவு கிடைத்ததும் பிரணாபின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுதவிர சமாஜ்வ்டி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளித்தனர்.
 
இதனால் பிரணாப் முகர்ஜிக்கு 70 சதவீத வாக்குகளை பெற்று பிரணாப் வெற்றி வாகை சூடுவார் என காங்கிரஸ்  தலைமை நம்புகிறது. அவரை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவுக்கு சில எதிர்க்கட்சிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்தன.
 
நாளை காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி மதியத்திற்குள் முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 72 சதவீத வாக்குகள் அதாவது கிட்டத்தட்ட 8  லட்சம் வாக்குகள் மொத்தம் பதிவாகியுள்ளன. இதில் பிரணாப் 5.6 லட்சம் ஓட்டுகள் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
புதிய ஜனாதிபதிக்கு வரும் 25-ம் தேதி, இந்திய தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

வன்முறை வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

வன்முறையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. அகிலேஷ் திரிபாதியை டெல்லி ....»