ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: கோட்டை கோவிலை அறநிலையத்துறை எடுப்பதை எதிர்த்து மீண்டும் மனு || petition filed against chennia high court judgement
Logo
சென்னை 10-02-2016 (புதன்கிழமை)
ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: கோட்டை கோவிலை அறநிலையத்துறை எடுப்பதை எதிர்த்து மீண்டும் மனு
ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: கோட்டை கோவிலை அறநிலையத்துறை எடுப்பதை எதிர்த்து மீண்டும் மனு
வேலூர், ஜூலை.21-
 
வேலூர் கோட்டை வளாகத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக கூறி இந்து சமய அறநிலையத்துறை கடந்த 24.09.08 அன்று உத்தரவிட்டது.
 
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜலகண்டேஸ்வரர் தர்மஸ்தாபன மனுதாக்கல் செய்தது. அதில் வேலூர் கோட்டை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடத்தில் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியாது.
 
எனவே அந்த உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை நீதிபதி சத்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
 
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டை வளாகம் உள்ளது என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு ஆலயம் கட்டப்பட்டு அங்கு மக்கள் வழிபடும் நிலையில் அந்த கோவில் நிர்வாகத்தில் தலையிடும் உரிமை இந்து சமய அறநிலையத்துறைக்கு வந்துவிடுகிறது.
 
பொதுமக்களிடம் இருந்து காணிக்கையாக நிதி வசூலிக்கப்பட்டு அதை வைத்து கோவில் நிர்வாகத்தை நடத்துவதால் அந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை தன்வசம் எடுத்துக் கொண்டதில் சட்டவிரோதம் இல்லை. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
ஐகோர்ட்டு தீர்ப்பு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவிலை இந்து சமய அறநிலையதுறை எடுத்து கொண்டதை எதிர்த்து மீண்டும் கோர்ட்டில் ரிட் மனுதாக்கல் செய்ய தர்மஸ்தாபன நிர்வாகிகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.
 
இதுபற்றி ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்மஸ்தாபன செயலாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:-
 
ஜலகண்டேஸ்வரர் கோவில் குறித்து ஐகோர்ட்டு உத்தரவு நகல் எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. கோர்ட்டு உத்தரவு நகல் வந்ததும் தர்மஸ்தாபன கமிட்டி கூட்டம் நடத்தபடும். அதில் மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்வோம்.
 
அறநிலையதுறை கோவிலை எடுப்பதை எதிர்த்து கோர்ட்டில் மீண்டும் ரிட் மனு செய்வோம். தர்மஸ்தாபன சேவை, இந்து சமய அறநிலையத்துறை சேவை எப்படி இருக்கிறது என்பதை பக்தர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - வேலூர்

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif