முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் பங்கேற்பு: சென்னையில் நாளை ஒலிம்பிக் ஓட்டம் || ex olympic player participate tomorrow Olympic Torch Relay
Logo
சென்னை 01-09-2014 (திங்கட்கிழமை)
  • விழுப்புரம்: செஞ்சி அருகே ஆசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை
  • ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வ சந்திப்பு
  • பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்படும்: ராஜ்நாத் சிங்
  • முல்லை பெரியாறு அணையில் ஆய்வு நடத்த 5 பேர் குழு புறப்பட்டது
  • இன்று முதல் 21 சுங்கச்சாவடிகளில் 15 சதவீதம் கட்டணம் உயர்வு
  • மவுலிவாக்கம் கட்டட விபத்து: மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
  • தாத்ரா வாகன ஒப்பந்தம்: தேஜிந்தர் சிங் ஜாமின் மனு தள்ளுபடி-கைது
  • ஐ.பி.எல். சூதாட்ட வழக்கை 2 மாதங்களில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் பங்கேற்பு: சென்னையில் நாளை ஒலிம்பிக் ஓட்டம்
முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் பங்கேற்பு: சென்னையில் நாளை
 ஒலிம்பிக் ஓட்டம்
சென்னை, ஜூலை. 21-

ஒலிம்பிக் போட்டி லண்டனில் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்துஸ்தான் பல்கலைக்கழகம் சார்பில் யங்ஸ்மேன் சர்வ தேச கிளப் மற்றும் இங்கிலாந்து துணை தூதரகம் ஆதரவுடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முன்னாள் இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் ஓட்டம் நடத்தப்படுகிறது.

இந்த ஒலிம்பிக் ஓட்டம் சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து நாளை காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. தாம்பரம் விமானப்படை அதிகாரி எஸ்.பிரபாகரன் கொடியசைத்து இந்த ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்த ஓட்டம் தரமணி டைடல் பார்க்கை அடைகிறது. இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் முன்னாள் ஒலிம்பியன்கள் வருமாறு:-

வி.பாஸ்கரன், கிருஷ்ண மூர்த்தி, முனீர்சேட், சார்லாஸ், வி.ஜே.பிலிப்ஸ், கோவிந்தா, ஆடம் சின்தினரியா, திருமால்வளவன், தினேஷ் நாயக் (ஆக்கி) சைனி வில்சன், ஜெய லட்சுமி, ராமச்சந்திரன், ஜின்சிபிலிப், திருஞான துரை (தடகளம்), அமர்நாத் (கூடைப்பந்து), தேவராஜன் (குத்துச்சண்டை), செபாஸ்டி யன் சேவியர் (நீச்சல்), ராமன், சரத்கமல் (டேபிள் டென்னிஸ்), ரமேஷ் கிருஷ்ணன் (டென்னிஸ்), கருணாகரன், சந்திரசேகரன், ஆதிசேகர், முத்து (பளு தூக்குதல்).

இந்த ஓட்டத்தில் பங்கேற்கும் அனைத்து முன்னாள் ஒலிம்பிக் வீரர், வீராங்கனைகள் பரிசளிப்பு விழாவில் கவுரவிக்கப்படுவார்கள். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல வாழ்த்தவும், ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த ஓட்டம் நடக்கிறது.

விளையாட்டு ஆர்வம் உள்ளவர்கள் இந்த ஓட்டத்தில் பங்கேற்லாம் என்று போட்டி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து வீரருமான ஜெய்சங்கர் மேனன் தெரிவித்து உள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

நாளை 4–வது போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

பர்மிங்காம், செப். 1–இந்தியா– இங்கிலாந்து அணிகள் மோதும் 4–வது ஒருநாள் போட்டி பர்மிங் காமில் நாளை ....»

300x100.jpg