சென்னையில் காலரா: வாந்தி பேதியால் 52 பேர் பாதிப்பு பெண் சாவு || cholera in chennai 22 affect one dead
Logo
சென்னை 01-09-2014 (திங்கட்கிழமை)
  • விழுப்புரம்: செஞ்சி அருகே ஆசிரியர் வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை
  • ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வ சந்திப்பு
  • பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் குறைக்கப்படும்: ராஜ்நாத் சிங்
  • வேலூர்: வாணியம்பாடி அருகே சமையல் கேஸ் வெடித்ததில் 3 வீடுகள் சேதம்
  • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சீனா பயணம்
சென்னையில் காலரா: வாந்தி-பேதியால் 52 பேர் பாதிப்பு-பெண் சாவு
சென்னையில் காலரா: வாந்தி-பேதியால் 52 பேர் பாதிப்பு-பெண் சாவு
ராயபுரம், ஜூலை. 21-
 
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தண்டையார்பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரியில் வாந்தி-பேதி ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
தேங்கியுள்ள கழிவுநீரிலும் குடிநீரிலும் கழிவு கலந்து வருவதும் இந்த பாதிப் புக்கு காரணமாகும். சுகாதாரமற்ற குடிநீரை குடிக்கும் பொதுமக்கள் வயிற்று போக்கால் பாதிக்கப்படுகிறார்கள்.
 
சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏசான்குளம், திருப்பதி நகர், புல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் வயிற்று போக்கு வாந்தி ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டனர். 34 பேர் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்கள். இவர்களில் 9 பேருக்கு காலரா நோய்க்கான அறிகுறிகள் இருந்ததால் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனைக்கு இன்று மாற்றப்பட்டனர். 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
 
புல்லம்மாள் (60) என்ற பெண் சிகிச்சை பலனிக்காமல் இன்று அதி காலை இறந்தார். இந்த நிலையில் வயிற்று போக்கு-வாந்தி பாதித்த மேலும் சிலர் இன்று தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
 
தமிழ் மணி, தமயந்தி, சிறுமி சசி, நந்தா, சேகர், ராஜா உள்பட 30 பேர் தண்டையார்பேட்டை ஆஸ்பத்திரியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். காலரா அறிகுறி உள்ளவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு எடுத்து அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவு 3 நாட்களுக்குள் வரும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
 
வாந்தி-பேதியால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் தண்டையார் பேட்டை தொற்று நோய் ஆஸ்பத்திரி நிரம்பி வழிகிறது. அங்கிருந்து சில நோயாளிகளை வேறு மருத்துமனைக்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளனர்.
 
சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். அதை தவிர்த்து வாந்தி-பேதி பாதிப்பு இல்லை, நோயாளிகள் யாரும் சிகிச்சை பெறவில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் மறுத்து வருவது பொதுமக்கள் உயிரோடு விளையாடும் செயலாகும்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஓய்வு பெற்றார்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம் பிள்ளை, அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இலங்கைக்கு ....»

300x100.jpg