சென்னையில் மோனோ ரெயில் பணி 3 மாதத்தில் தொடங்கும் || chennai mono rail work three month start
Logo
சென்னை 05-03-2015 (வியாழக்கிழமை)
சென்னையில் மோனோ ரெயில் பணி 3 மாதத்தில் தொடங்கும்
சென்னையில் மோனோ ரெயில் பணி 3 மாதத்தில் தொடங்கும்
சென்னை, ஜூலை 21-

தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் “மோனோ” ரெயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். முதல் கட்டமாக சென்னை, புறநகர் பகுதியில் “மோனோ” ரெயில் திட்டம் நடை முறைப்படுத்தப்படுகிறது இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை நகரில் மெட்ரோ ரெயில் பணிகள் தீவிரமாக நடந்த வருகிறது.

எனவே, புறநகர் பகுதி மக்களின் போக்கு வரத்து வசதிக்காக மோனோ ரெயில் திட்டத்தையும் உடனடியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது சென்னை புறநகர் மோனோ ரெயில் திட்டத்தில் 4 வழித் தடங்களுக்கான பாதைகள் அமைக்கப்படுகின்றன. இதில் வேளச்சேரியில் இருந்து வண்டலூர் வரை 23 கிலோ மீட்டர் தூரமும், வடபழனியில் இருந்து பூந்தமல்லிவரை 18 கி.மீ. தூரமும் 2 மோனோ ரெயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன.

இது போல் வண்டலூரில் இருந்து புழல் வரை 54 கிலோ மீட்டர் தூரம் மோனோ ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. பூந்த மல்லியில் இருந்து கத்திப் பாராவரை அமைக்கப்படும் மற்றொரு மோனோ ரெயில் பாதையின் நீளம் 16 கிலோ மீட்டர். 8,500 கோடி ரூபாய் செலவில் இது செயல்படுத்தப்படுகிறது.

இந்த பணிக்கான திட்டம் தயார் நிலையில் உள்ளது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக அளவிலான டெண்டர் மூலம் பல நிறுவனங்கள் இந்த திட்டப்பணிகளை செய்ய தயாராக உள்ளன. இதில் 5 நிறுவனங்கள் அரசால் தேர்வு செய்யப்படும். அதன் பிறகு “மோனோ” ரெயில் பாதைகள், மோனோ ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும். இன்னும் 3 மாதத்தில் இந்த பணிகள் தொடங்கி விடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமாக எழுதிய 50 வயது அரசு பள்ளி ஆசிரியர் கைது

பஞ்சாப் மாநிலத்தில் 12 வயது மாணவியின் நோட்டுப்புத்தகத்தில் ஆபாசமான கருத்துக்களை எழுதிய 50 வயது ஆசிரியர் ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif