வருமான வரி கணக்கு தாக்கல்: ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு விலக்கு || income tax disort until get 5 lakhs per year
Logo
சென்னை 09-10-2015 (வெள்ளிக்கிழமை)
  • ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை 1-0 என புனே வீழ்த்தியது
வருமான வரி கணக்கு தாக்கல்: ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு விலக்கு
வருமான வரி கணக்கு தாக்கல்: ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு விலக்கு
புதுடெல்லி, ஜூலை,21-
 
வருமான வரிவசூலை மேம்படுத்த மத்திய வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கலுக்கு வரும் 31-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு கடைசி நிமிடத்தில் கூட்டம் அதிகரிக்கும். அதை கருத்தில் கொண்டு வருமான வரி அலுவலகங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 
இது தவிர வருமான வரி செலுத்துபவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேரடியாக வரி வசூல் வாகனங்களை அனுப்பி ஐ.டி ரிட்டர்ன்களை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பெறுபவர்கள் வருமானத்தில் 10 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும். ரூ5 முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும் ஆண்டு வருமானம் ரூ10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 30சதவீதமும் வரியாக செலுத்த வேண்டும்.
 
இந்த பிரிவில் வரும் அனைவரும் வருமான வரி கணக்கை தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் ரூ5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி கணக்கு தாக்கலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடெங்கும் உள்ள சுமார் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

பீகாரை ரிமோட் மூலம் இயக்க நினைக்கிறார் லாலு: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. நாளையுடன் ....»

VanniarMatrimony_300x100px_2.gif