கலவரம் எதிரொலி: சிரியா அதிபர் ஆசாத் பதவி விலக தயார் ரஷிய தூதர் தகவல் || Riots echo Syria ready resign president assad
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
கலவரம் எதிரொலி: சிரியா அதிபர் ஆசாத் பதவி விலக தயார்- ரஷிய தூதர் தகவல்
கலவரம் எதிரொலி: சிரியா அதிபர் ஆசாத் பதவி விலக தயார்- ரஷிய தூதர் தகவல்
பாரிஸ், ஜூலை.21-

சிரியாவில் அதிபர் பஷர்-அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்கள் மீது ஆசாத்தின் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 15 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து தற்போது கலவரம் தீவிரம் அடைந்துள்ளது. எனவே ஆசாத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் இருந்து ஒலிக்க தொடங்கி விட்டது. மேலும் புரட்சி படையின் கையும் ஓங்கியுள்ளது. எல்லைப்புற முக்கிய நகரங்களை அவர்கள் கைப்பற்றி உள்ளனர்.

தலைநகரான டமாஸ் கசை கைப்பற்றும் தீவிர முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே அதிபர் ஆசாத் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார். இந்த நிலையில் அவர் முறைப்படி பதவி விலக தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்சுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஆர்லோவ் கூறும்போது, உலக நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று அதிபர் ஆசாத் பதவி விலக தயாராக உள்ளார். சிரியாவில் ஜனநாயக ஆட்சிமுறை ஏற்படுத்த வேண்டும் என ஐ.நா.வின் ஜெனீவா மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தான் பதவி விலகுவது குறித்து எதிர்தரப்பினரிடம் (புரட்சி படையிடம்) பேச்சுவார்த்தை நடத்த தனது சார்பில் பிரதி நிதியை நியமித்துள்ளார். இதற்கு பிறகும் தன்னால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது என்பதை அவர் உணர்ந்துள்ளார் என தெரிவித்துள்ளார். ஆனால் இதை சிரியா தகவல் துறை அமைச்சகம் மறுப்பு தெரித்துள்ளது.

ரஷிய தூதர் ஆர்லோவின் கருத்து முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கூறியுள்ளது. இதற்கிடையே தூதர் கோபிஅனனின் சமாதான திட்டத்தை ஏற்க அதிபர் ஆசாத் மறுத்தால் சிரியாவுக்கான பொருளாதார தடை விதிக்கப்படும் என்ற ஐ.நா.வின் தீர்மானத்துக்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - உலகச்செய்திகள்

section1

பாகிஸ்தான்: ஐதராபாத் சிறையை தகர்க்க திட்டமிட்ட 97 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது

அமெரிக்காவின் பிரபல வால் ஸ்டிரீட் பத்திரிகை நிருபரான டேனியல் பியர்ல் என்பவர் கடந்த 2002-ம் ஆண்டு ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif