கேரள நர்சு கற்பழிப்பு: செக்ஸ் டாக்டரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு || kerala nurse torcher doctor enquiry police
Logo
சென்னை 29-08-2015 (சனிக்கிழமை)
கேரள நர்சு கற்பழிப்பு: செக்ஸ் டாக்டரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு
கேரள நர்சு கற்பழிப்பு: செக்ஸ் டாக்டரை போலீஸ் காவலில் எடுக்க முடிவு
சென்னை, ஜூலை.21-

சென்னை அண்ணாநகர் - திருமங்கலம் ரோட்டில் எமரால்டு அடுக்குமாடி குடியிருப்பில் கேரள ஆயுர்வேத ஹெல்த் சென்டர் என்ற ஆஸ்பத்திரி செயல்பட்டு வந்தது. இந்த ஆஸ்பத்திரியை நடத்தி வந்தவர் டாக்டர் ஸ்ரீஜத் (33). கேரளாவைச் சேர்ந்த இவர் கொரட்டூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவரது ஆஸ்பத்திரிக்கு நர்சு பயிற்சிக்கு வந்த கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா ஊரைச் சேர்ந்த பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை டாக்டர் ஸ்ரீஜத், தனது நண்பரான இன்னொரு டாக்டர் அஜில்குமாருடன் சேர்ந்து கற்பழித்ததாக பரபரப்பான புகார் கூறப்பட்டுள்ளது.

இதனால் 2 டாக்டர்கள் மீதும் ஜெ.ஜெ. நகர் போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்து இருவரும் தலைமறைவாகி கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டனர். முன் ஜாமீன் கொடுக்க கோர்ட்டு மறுத்து விட்டது. இதனால் போலீசார் டாக்டர் ஸ்ரீஜத்தை நேற்று கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக போலீஸ் பிடியில் இருந்தபோது, ஸ்ரீஜித் போலீசாரிடம் பரபரப்பான தகவல்களை கூறினார். அதன் விவரம் வருமாறு:-

நான் நடத்தி வந்த “கேரள ஆயுர்வேத ஹெல்த் சென்டர்” கடந்த 10 ஆண்டுகளாக செயல்படுகிறது. இங்கு கால்வலி, மூட்டு வலிக்கு சிறந்த முறையில் ஆயுர் வேத சிகிச்சை அளித்து வருகிறோம். நிறைய பெண்கள் மூட்டு வலிக்கு சிகிச்சை பெற எனது ஆஸ்பத்திரிக்கு வருவார்கள். நானும், டாக்டர் அஜில்குமாரும் நண்பர்கள்.

அவர் திருச்சியில் ஆயுர் வேத ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். அவரது ஆஸ்பத்திரிக்கு பயிற்சிக்கு வரும் நர்சுகளை எனது ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவார். கேரளாவில் இருந்து நர்சு பயிற்சிக்கு வரும் இளம்பெண்களை எங்கள் பக்கம் ஈர்க்க அடிக்கடி ஐஸ், ஜூஸ், சாப்பாடு ஆகியவற்றை ஓசியில் வாங்கி கொடுப்போம், இதனால் எங்களுடன் நர்சுகள் சிரித்து சிரித்து நெருங்கி பேசுவார்கள்.

எங்கள் பேச்சில் மயங்கும் பெண்களை தொட்டு பேச ஆரம்பிப்போம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நர்சுகளை நாளடைவில் உரிமையோடு கையை பிடித்து இழுத்து பேசுவோம். தோளில் கை போட்டு பேசும் அளவுக்கு நெருக்கம் வந்ததும் உல்லாசம் அனுபவிப்போம்.

இதே போல் தான் பாத்திமாவை அணுகினோம். ஆனால் அவர் எங்களுடன் நெருங்கி பழக மறுத்து விட்டார். ஜெ.ஜெ. நகரில் உள்ள எனது ஆடம்பர பங்களா வீட்டில் பாத்திமாவை டாக்டர் அஜில்குமார் எப்படியோ பலவந்தப்படுத்தி இன்பம் அனுபவித்து விட்டார்.

இந்த விஷயம் தெரிந்ததும் எனக்கும் பாத்திமாவை அனுபவிக்க ஆசை ஏற்பட்டது. அவரிடம் நெருங்கியபோது எனக்கு உடன்பட மறுத்தார். இதனால் மிரட்டி இன்பம் அனுபவித்தேன். இந்த விஷயங்களை பின்னர் பாத்திமா வெளியில் சொல்லி விட்டார். இதனால் போலீஸ் வரை விஷயம் சென்று விட்டது. இப்போது மாட்டிக் கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் இவரது நண்பர் டாக்டர் அஜில்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள். அஜில்குமார் பிடிபட்டால் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று போலீசார் கூறி உள்ளனர்.

சிறையில் இருக்கும் டாக்டர் ஸ்ரீஜத்தை முழுமையாக விசாரித்து முடிக்க வில்லை என்பதால் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாக போலீசார் கூறினார்கள்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
tamil_matrimony_60.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு: மாணவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் சவான்னா மாகாண பல்கலைக்கழகம் உள்ளது. இது கருப்பர் இனத்தவருக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் ....»

amarprash.gif