சிறுநீர் குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு கல்வி அதிகாரி நேரில் விசாரணை || student abuse 3 teachers suspended
Logo
சென்னை 11-02-2016 (வியாழக்கிழமை)
சிறுநீர் குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு- கல்வி அதிகாரி நேரில் விசாரணை
சிறுநீர் குடிக்க வைத்து மாணவர் சித்ரவதை: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு- கல்வி அதிகாரி நேரில் விசாரணை
கும்பகோணம், ஜூலை.21-
 
சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள மாநிலத்தில் விடுதியில் தங்கிப் படித்த மாணவியை விடுதி பெண் வார்டன் சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அந்த மாணவி தூக்கத்தில் போர்வையில் சிறுநீர் கழித்து விட்டார். இதை அறிந்த விடுதி வார்டன் அதை பிழிந்து குடிக்க வைத்த கொடூர குற்றச்செயலில் ஈடுபட்டார். சம்பந்தப்பட்ட வார்டன் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
 
இது போன்ற சம்பவம் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழன் மாளிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்குராஜன். கூலித் தொழிலாளி. இவரது மகன் பரத்ராஜ் (14). பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.
 
பள்ளி அருகில் உள்ள விடுதியில் பரத்ராஜ் தங்கி இருந்தான். அதே விடுதியில் இப்பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று இரவு விடுதியில் மாணவர்கள் மாதாந்திர தேர்வுக்கு படித்து கொண்டிருந்தனர். அப்போது பரத்ராஜ் சிறுநீர் கழிக்க வெளியில் செல்ல அனுமதிக்குமாறு அங்கு இருந்த ஆசிரியர்களிடம் கேட்டான். அதற்கு அவர்கள் சரியாக படிக்காமல் அடிக்கடி வெளியில் செல்கிறாயா? என்று பரத்ராஜை அடித்து, துன்புறுத்தியதோடு சிறுநீர் கழிக்க வெளியில் செல்லக்கூடாது, அதை இங்கேயே குடி என்று பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
 
இதனால் இரவு முழுவதும் அழுது கொண்டிருந்த பரத்ராஜ் விடுதியிலிருந்து வெளியேறி பஸ் மூலம் சோழன் மாளிகையில் உள்ள வீட்டிற்கு சென்றான். அவனது தந்தை தேசிங்கு ராஜன் மரத்தில் இருந்து தவறி விழுந்து கும்பகோணம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதால் மாணவன் ஆஸ்பத்திரிக்கு சென்று தந்தையிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தான்.
 
அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். மாணவர் பரத்ராஜும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
 
சம்பவம் பற்றி மாணவர் பரத்ராஜ் கூறியதாவது:-
 
நேற்று முன்தினம் இரவு படித்து கொண்டிருந்த போது சிறு நீர் வந்தது. அங்கிருந்த 3 ஆசிரியர்களிடம் சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என்றேன். அதற்கு அவர்கள் படிக்கும் நேரத்தில் சிறுநீர் எப்படி வரும்? அந்த சிறுநீரை நீயே பிடித்து குடி என்று எனது கையால் சிறுநீரை பிடித்து குடிக்கும் படி வற்புறுத்தினார்கள்.
 
எனது முதுகு, கை, தொடைகளில் கம்பால் 3 ஆசிரியர்களும் தாக்கினார்கள். அடி தாங்க முடியாமல் கத்தினேன். மேலும் அடிப்பார்கள் என்ற பயத்தில் சிறுநீரை கையில் பிடித்து குடித்தேன். பின்னர் காலையில் வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன்.
 
இவ்வாறு மாணவர் பரத் ராஜ் கூறினார்.
 
இது பற்றி தலைமை ஆசிரியர் சக்திவேல் கூறியதாவது:-
 
எங்கள் பள்ளியில் 529 பேர் படித்து வருகிறார்கள். 469 பேர் விடுதியில் தங்கி உள்ளனர். மாணவர் பரத்ராஜூக்கு புகையிலை போடும் பழக்கம் உண்டு. மற்ற மாணவர்களுக்கும் அதனை கொடுத்துள்ளார். மாணவரை ஆசிரியர்கள் அடித்ததாகவும் சிறுநீர் குடிக்க சொன்னதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
புகாரில் உண்மை இருந்தால் ஆசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இதுபற்றி அறிந்ததும் தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து பெரம்பலூர் தொடக்க கல்வி அலுவலர் ஜெயலட்சுமி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று நேரில் விசாரணை நடத்தினார். பெரம்பலூர் முதன்மை கல்வி அதிகாரி மல்லிகா கூறுகையில், ஆசிரியர்கள் மீதான புகார் குறித்து நேரில் சென்று விசாரித்து உண்மை இருக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி தாளாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றார்.
 
சென்னை பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கண்ணப்பன் கூறும் போது, சம்பவம் நடந்தது சுயநிதிப்பள்ளியாகும். மாணவன் புகையிலை போடும் பழக்கம் உள்ளவன் என்று தெரிய வந்துள்ளது. ஆசிரியர் இதை கண்டித்தார். மாணவன் சொல்வது உண்மையா? பொய்யா? என்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 
இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் சக்திவேல், கருப்பையா, ராஜா ஆகிய 3 பேர் இன்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர். பள்ளி நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவன் பரத்வாஜ், வாக்குமூலத்தை தொடர்ந்து மங்களமேடு போலீசார் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கைதாகலாம் என கூறப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: நியூ ஹாம்சயரில் டிரம்ப், சாண்டர்ஸ் வெற்றி

ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் நவம்பர் மாதம் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif