அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கருணாநிதிக்கு சிகிச்சை || treatment to karunanidhi in apollo hospital
Logo
சென்னை 27-03-2015 (வெள்ளிக்கிழமை)
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று பாரத் ரத்னா விருது வழங்கப்படுகிறது
  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது
  • ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவையில் கடும் அமளி: சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் மோதல்
  • பாரத ரத்னா விருது வழங்குவதற்காக வாஜ்பாய் வீட்டுக்கு புறப்பட்டார் ஜனாதிபதி
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கருணாநிதிக்கு சிகிச்சை
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கருணாநிதிக்கு சிகிச்சை
சென்னை, ஜூலை.21-
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி தினமும் காலையும், மாலையும் அறிவாலயம் சென்று கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார்.  நேற்றும் காலையும், மாலையும், அறிவாலயம் வந்து கட்சி பணிகளை கவனித்தார். கட்சி பிரமுகர்களை சந்தித்தார். பின்னர் வீடு திரும்பினார்.
 
இரவு உணவு அருந்தி விட்டு படுக்கச் சென்றார். இன்று அதிகாலை 1.30 மணி அளவில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது.   வயிற்று கோளாறால் அவதிப்பட்டார். எனவே அதிகாலை 2.30 மணியளவில் அவரை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
 
இதையடுத்து கருணாநிதிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். காலை 6.30 மணிக்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முழுமையாக குணம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இன்று காலை 6.45 மணியளவில் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
 
தி.மு.க. தலைவர் கருணாநிதி வயிற்றுக் கோளாறு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தார். சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். நலமாக இருக்கிறார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

இளைஞர்களை கவரும் வகையில் புதிய பல்ஸர் ஆர்.எஸ்.200 பைக்கை அறிமுகப்படுத்தியது பஜாஜ்

பஜாஜ் நிறுவனம் தனது இழந்த மார்க்கெட்டை பிடிக்கும் நோக்கத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் புதிய பல்ஸர் ....»