பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு || poondi lake krishna water increase
Logo
சென்னை 04-05-2015 (திங்கட்கிழமை)
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து அதிகரிப்பு
சென்னை, ஜூலை.21-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 1279 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. புழல் ஏரியில் 1335 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் 1007 மில்லியன் கன அடியும், சோழவரத்தில் 85 மில்லியன் கன அடி தண்ணீரும் இருக்கிறது.

வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லை. கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சென்னை நகருக்கு தினமும் தொடர்ந்து 830 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. என்றாலும் வெயில் மற்றும் கால்வாய் வறட்சி காரணமாக பூண்டி ஏரிக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

தற்போது அவ்வப்போது மழை பெய்வதாலும், வெயில் தாக்கம் குறைந்து இருப்பதாலும் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வரை 200 கன அடிக்கும் குறைவாகவே ஏரிக்கு தண்ணீர் வந்தது. கடந்த சில தினங்களாக 250 கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. இன்று 298 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் இருந்து தற்போது 1200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் சென்னை நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. ஏரிகளில் இருக்கும் தண்ணீர் வடகிழக்கு பருவ மழை காலம் வரை குடிநீர் வழங்க போதுமானது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

நேபாளத்தில், மலை ஏறும் குழுவைச் சேர்ந்த இந்தியர் உள்பட 12 பேர் மீட்பு

நேபாள நாட்டில் கடந்த 25-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9 புள்ளிகளாக பதிவான ....»

amarprakash160-600.gif