மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்க சரத்பவார் கட்சி முடிவு: சமரச முயற்சிகள் நீடிப்பு || sharad pawar parties to support central government from outside
Logo
சென்னை 28-01-2015 (புதன்கிழமை)
  • ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை
  • காவிரியில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு: விவசாயிகள் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்-ஆளுநரை சந்தித்து மனு
  • ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதியில் செரினா வெற்றி-வீனஸ் தோல்வி
மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்க சரத்பவார் கட்சி முடிவு: சமரச முயற்சிகள் நீடிப்பு
மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்க சரத்பவார் கட்சி முடிவு: 
சமரச முயற்சிகள் நீடிப்பு
புதுடெல்லி, ஜூலை. 21-
 
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் தீரவில்லை. மத்திய மந்திரிசபையில் சரத்பவாருக்கு 2-வது இடம் கிடைக்காதது, பாதுகாப்பு குழுவில் சேர்க்காதது, பாராளுமன்ற அவை முன்னவர் பதவிக்கு சரத்பவார் பெயரை பரிசீலிக்காதது உள்பட பல காரணங்களால் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
 
வேளாண்துறையை கவனித்து வரும் சரத்பவார், கடந்த சில மாதங்களாக தான் பரிந்துரை செய்த ஒப்பந்த விஷயங்கள் கிடப்பில் போடப்பட்டதால் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் உள்ளார். சமீப காலமாக மிகவும் ஒரம் கட்டப்படுவதாக உணர்ந்த சரத்பவார், நேற்று முன்தினம் கொந்தளித்து விட்டார்.
 
அவசரப்பட்டு மந்திரி பதவியை ராஜினாமா செய்து விடாதீர்கள் என்று சரத்பவாரை பிரதமர் மன் மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று சமரசம் செய்தனர். ஆனால் இது வரை சரத்பவாரும் அவரது கட்சியினரும் சமரசம் ஆகவில்லை.
 
மத்திய மந்திரிசபையில் இருந்து விலகி விடலாம் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சரத் பவாரிடம் வற்புறுத்தி வருகிறார்கள். மத்திய அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக உள்ளதால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என்றும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
 
இது பற்றி மன்மோகன்சிங் கிடமும், சோனியாவிடமும் சரத்பவார் கூறி விட்டதாக தெரிகிறது. எனவே சரத் பவாரை எந்த வழியில் சாந்தப்படுத்தலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். மந்திரிசபையில் மன் மோகன்சிங்குக்கு அடுத்த இடம் ஏ.கே.அந்தோணிக்குத் தான் என்பதில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் வேறு சில சலுகைகளை காட்டி சரத் பவாரை அமைதிப்படுத்த நினைக்கிறார்கள்.  
 
காங்கிரஸ்காரர்களின் பேச்சுவார்த்தைக்கு சரத்பவார் உடன்படுவாரா என்று தெரியவில்லை. இது தொடர்பாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) டெல்லியில் கூடி அடுத்த கட்ட முடிவு எடுக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
 
அதன் பிறகே தேசியவாத காங்கிரஸ் கட்சி, மத்திய அரசில் நீடிக்குமா என்பது தெரியவரும். இந்த நிலையில் மராட்டியத்தில் நடந்து வரும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் விரிசல் ஏற்படும் அறிகுறி தோன்றியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தேசியச்செய்திகள்

section1

கோழிக்கோடு அருகே துப்பாக்கியால் சுட்டு மனைவி கொலை: ராணுவ வீரர் கைது

திருவனந்தபுரம், ஜன. 28–கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குந்த மங்கலம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் ....»