பேட்மிண்டனில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: இந்திய சம்மேளனம் அறிவிப்பு || indian badminton association announces 1 crore cash for olympic gold medal winner
Logo
சென்னை 03-03-2015 (செவ்வாய்க்கிழமை)
பேட்மிண்டனில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: இந்திய சம்மேளனம் அறிவிப்பு
பேட்மிண்டனில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு: இந்திய சம்மேளனம் அறிவிப்பு
புதுடெல்லி, ஜூலை 21-

லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 6 நாட்கள் உள்ளன. இதில் பங்குபெற இந்திய வீரர்கள் லண்டன் சென்றுள்ளனர். வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தில் உலகளவில் இருந்து வந்துள்ள வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்தியா சார்பில் சாய்னா உள்பட அஸ்வினி பொன்னப்பா, ஜுவாலா கட்டா, பாருபள்ளி காஷ்யப், வலியவீட்டில் டிஜு ஆகிய 5 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்கள் ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு என அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்கின்றனர்.  இந்த வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய பேட்மிண்டன் குழுவை ஊக்குவிக்கும் வகையில் பம்பர் பரிசுத்தொகையை இந்திய பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதன்படி ஒலிம்பிக் பேட்மிண்டனில் தங்கப்பதக்கம் வெல்லும் இந்தியருக்கு ரூ.1 கோடியும், வெள்ளி வென்றால் ரூ.50 லட்சமும், வெண்கலம் பெற்றால் ரூ.25 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளன தலைவர் அகிலேஷ் தாஸ் குப்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

அயர்லாந்தை 201 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற 24-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா- அயர்லாந்து அணிகள் பலப்பரிட்சை ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif