போதை மருந்து பயன்படுத்திய ராகுல்சர்மா கைதாகிறார் || Rahul Sharma will be arrested for using drug
Logo
சென்னை 25-11-2015 (புதன்கிழமை)
போதை மருந்து பயன்படுத்திய ராகுல்சர்மா கைதாகிறார்
போதை மருந்து பயன்படுத்திய ராகுல்சர்மா கைதாகிறார்
புதுடெல்லி, ஜூலை. 21-

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதம் நடந்தது. இந்தப்போட்டியில் விளையாடிய புனே வாரியர்ஸ் அணியை சேர்ந்த இந்திய சுழற்பந்து வீரர் ராகுல்சர்மா, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் பர்னல் ஆகியோர் மும்கை ஜூடு பகுதியில் இருக்கும் நட்சத்திர போதை விருந்தில் (ரேவ் பார்ட்) கலந்து கொண்டனர்.

போலீசார் சோதனை நடத்திய போது அவர்கள் இருவரும் அங்கிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் தாங்கள் போதை பொருள் எதையும் பயன் படுத்தவில்லை. தாங்கள் அப்பாவிகள், தற்செயலாக அந்த ஓட்டலுக்கு வந்ததாக அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை விடுத்தனர் என்றாலும் சோதனையாக அவர்களது ரத்த மாதிரி எடுத்துக் கொள்ளப்பட்டது. ரேவ் பார்ட்டில் பங்கேற்ற 90 பேரில் முதல் கட்டமாக 46 பேரின் மருத்துவ பரிசோதனை கடந்த 22-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் 44 பேர் போதை பொருள் பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.

எஞ்சிய 44 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ராகுல்சர்மா, பர்னல் உள்பட 44 பேர் போதை பொருள் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது. இந்த 44 பேரில் 38 பேர் பெண்கள் ஆவார்கள். ராகுல்சர்மா போதை பொருள் பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் கைதாகும் நிலையில் உள்ளார்.

ராகுல்சர்மா தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார். 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த விவகாரம் காரணமாக ராகுல்சர்மா இந்திய அணியில் இருந்து நீக்கப்படுவார் என்றாலும் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. போலீசார் விசாரணை அறிக்கையை முழுமையாக படித்த பிறகும், ராகுல் சர்மாவிடம் இது தொடர்பாக விசாரணை செய்த பிறகுமே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை ஒழுங்குப்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை

ந்தேதி தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ....»