தகுதி உள்ள 942 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு || Promotion for middle school Teachers
Logo
சென்னை 28-07-2015 (செவ்வாய்க்கிழமை)
தகுதி உள்ள 942 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
தகுதி உள்ள 942 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு
சென்னை,ஜுலை.21-
 
தகுதி உள்ள 942 இடை நிலைஆசிரியர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக 942 பேர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. கடந்த 2009-2010-ம் ஆண்டு 831 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நடுநிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் உண்டு. எனவே 831 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்பட்டன.
 
2010-2011-ம் ஆண்டு 218 பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட வகையில் 218 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஏற்பட்டன. மொத்தம் உள்ள 1,267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் 325 பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அவர்கள் போக மீதம் உள்ள 942 பணியிடங்கள் தற்போது இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதி உள்ளவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. அதற்கான கவுன்சிலிங் இன்று (சனிக்கிழமை) அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

கெய்ரோ பர்னிச்சர் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: 19 பேர் சாவு

எகிப்தில் நாட்டின் தலைநகர் கெய்ரோவில் இருந்து வடக்குப் பகுதியில் உள்ளது மாகாணம் குயலியோயுபியா. இங்குள்ள அல்-ஒபோவுர் ....»

MM-TRC-B.gif