ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு ரங்கசாமியிடம் மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்தோம்: வைத்திலிங்கம் பேட்டி || we Disappointment rangasamy change after president election vaithiling
Logo
சென்னை 13-02-2016 (சனிக்கிழமை)
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு ரங்கசாமியிடம் மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்தோம்: வைத்திலிங்கம் பேட்டி
ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு ரங்கசாமியிடம் மாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்தோம்: வைத்திலிங்கம் பேட்டி
புதுச்சேரி, ஜூலை. 20-
 
புதுவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
ராகுல்காந்தி ஆட்சி பொறுப்பிற்கு வருவதாக அறிவித்துள்ளார். காங்கிரசார் பல காலம் இந்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்தார்கள். புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நானும் இதை முழு மனதோடு வரவேற்கிறோம். இன்று இந்தியாவிற்கு வழிகாட்ட இளைய சமுதாயம் வேண்டும் எனும்போது அவருடைய வருகை நல்ல வருகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
 
என்.ஆர். காங்கிரஸ் அரசின் பட்ஜெட் முற்றிலும் மக்களை ஏமாற்றும் பட்ஜெட். கடந்த ஆண்டு சென்டாக் கலந்தாய்வில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண தொகையையும் அரசு செலுத்தும் என்று ரங்கசாமி அறிவித்தார். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. புதுவையில் குப்பையை அகற்றுவது பற்றி பட்ஜெட்டில் எதுவும் சொல்லப்படவில்லை.
 
ரேஷனில் தரமில்லாத அரிசி வழங்கப்படுகிறது. எப்போதும் இல்லாத அளவிற்கு அரிசி 5 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. ரேஷனில் தரமான அரிசி வழங்குவது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை.
 
வாட்வரி உயர்வை குறைப்பது பற்றியும் எதுவும் பட்ஜெட்டில் குறிப்பிடவில்லை. தானே புயலுக்கு பிறகு வரியை உயர்த்தினார். மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் புதுவையில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
 
ஆனால் தனியார் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுகிறார். மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் பிராந்திய இடஒதுக்கீட்டு பிரச்சினை குறித்து அரசின் நிலைப்பாடு பற்றி பட்ஜெட்டில் ரங்கசாமி எதுவும் தெரிவிக்கவில்லை. கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக ரங்கசாமி அறிவித்துள்ளார். ஆனால் ரோடியர், சுதேசி, பாரதி, கூட்டுறவு நூற்பாலை ஆகியவைகளுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து எதுவும் கூறவில்லை.
 
ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு என்று ரங்கசாமி கூறினார். அதற்கு பிறகு அவரது நிலைப்பாட்டில் மாற்றம் இருக்கும் என்று புதுவை காங்கிரசார் நம்பினோம். ஆனால் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - புதுச்சேரி

section1

கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ரகசிய ஆலோசனை

புதுச்சேரி, பிப். 13–முன்னாள் அமைச்சர் கண்ணன் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif