புதுவை ரோடியர் மில் அதிகாரி வீட்டில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை || puduvai roeiyar mill owner house 35 lakhs robbery
Logo
சென்னை 29-01-2015 (வியாழக்கிழமை)
புதுவை ரோடியர் மில் அதிகாரி வீட்டில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை
புதுவை ரோடியர் மில் அதிகாரி வீட்டில் ரூ.35 லட்சம் நகை, பணம் கொள்ளை
புதுச்சேரி, ஜூலை. 20-
 
புதுவை ரெட்டியார் பாளையம் தேவா நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 57). இவர் ஐயங்குட்டி பாளையம் ரோடியர் மில் பிரிவில் துணை மேனேஜராக உள்ளார். இவரது மனைவி பாலாமணி. தபால் துறையில் வேலை செய்து விருப்ப பணி ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் சதீஷ் (வயது 28). அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். இன்னொரு மகன் விவேக் (வயது 25). சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிகிறார்.
 
ராதாகிருஷ்ணன் தனது குடும்பத்தினருடன் சபரிமலைக்கு செல்ல விரும்பினார். அதன்படி கடந்த 15-ந்தேதி குடும்பத்தினர் அனைவரும் புறப்பட்டு சென்றனர். நேற்று அதிகாலை அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது வீட்டு முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்து அனைத்து பொருட்களும் தாறுமாறாக வீசப்பட்டு அலங்கோலமாக கிடந்தது.
 
பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 130 பவுன் தங்க நகை, 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 1லட்சம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.
 
ராதாகிருஷ்ணன் இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசுக்கு தகவல் அளித்தார். புதுவை தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமி, இன்ஸ்பெக்டர் மாறன், சப்-இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
 
கைரேகை நிபுணர்களை போலீசார் உடனடியாக வரவழைத்தனர். அங்கு பதிவாகியிருந்த முக்கிய தடயங்களை அவர்கள் சேகரித்துள்ளனர்.
 
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பைரவசாமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-
 
இந்த துணிகர சம்பவம் இப்பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெளியூர்களுக்கு செல்பவர்கள் அதிகமான நகை, பணம் போன்றவற்றை வீட்டில் விட்டுச் செல்ல வேண்டாம். அப்படியே வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். ஆகிய எத்தனையோ நடைமுறைகளை பின்பற்றும்படி கேட்டுக் கொண்டாலும் பலர் இதனை கடைபிடிப்பதில்லை.
 
இந்த வழக்கை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம். இன்ஸ்பெக்டர்கள் மாறன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. லும் இதில் சில முக்கியமான தடயங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை விரைவில் மடக்கிபிடிப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்த கொள்ளை சம்பவம் ரெட்டியார்பாளையம் தேவாநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமெரிக்காவுக்கு எதிராக அணிசேரும் நாடுகள்: என்ன செய்யப்போகிறது இந்தியா?

அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் மேலும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே ரஷ்யா உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு செய்து ....»