தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் கோயில் இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவதை கைவிடவேண்டும்: பா.ஜனதா || governmen avoid give patta to thenkaraikottai kalyana ramar temple land
Logo
சென்னை 01-12-2015 (செவ்வாய்க்கிழமை)
தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் கோயில் இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவதை கைவிடவேண்டும்: பா.ஜனதா
தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் கோயில் இடத்தில் வீட்டு மனைப் பட்டா வழங்குவதை கைவிடவேண்டும்: பா.ஜனதா
அரூர், ஜூலை. 20-
 
அரூரை அடுத்து தென்கரைக்கோட்டை கல்யாண ராமர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இலவச பட்டா வழங்குவதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என பா.ஜ.க.வினர் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தியுள்ளனர்.
 
இதுகுறித்து பா.ஜ.க.வினர் அரூர் கோட்டாட்சியர் காமராசரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
 
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டையில் வரலாற்று பாரம்பரியம் மிக்க ஸ்ரீகல்யாண ராமன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடம் 39.42 ஏக்கர் நிலம் உள்ளது. தென்கரைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியுள்ளனர்.
 
கோவில் நிலத்தில் கட்டுப்பட்டுள்ள வீடுகளை இடிக்க கோரி பா.ஜ.க.சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடுகளை இடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரையிலும் நீதிமன்ற உத்தரவின்படி வீடுகள் இடிக்கப்படவில்லை. கோவில் நிலப்பிரச்சினை தொடர்பான வழக்கு தற்போதும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் தென்கரைக்கோட்டை கோவில் நிலப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. எனவே கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். இவ்வாறு பா.ஜ.க.வினர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
 
கட்சியின் மாவட்டத் தலைவர் பிரபாகரன் தலைமையில், மாவட்ட செயலாளர் குமரவேல், விவாசய அணி மாவட்டத் தலைவர் வேடியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் அழகு, மாவட்ட செயலர் குழந்தைரவி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தர்மபுரி

section1

தர்மபுரியில் பிளஸ்–1 மாணவி மர்மசாவு: தூக்கில் பிணமாக தொங்கினார்

தர்மபுரி,டிச.1–தர்மபுரி பிடமனேரி பசவராஜ் காலனியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகள் பிரித்தி(வயது 16).இவர் தர்மபுரியில் உள்ள ....»

AadidravidarMatrimony_300x100px_28-10-15-3.gif