கேரள சிறுமி கற்பழித்து கொலை: சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம் || kerala child molestation then murder case change cbcid
Logo
சென்னை 28-11-2015 (சனிக்கிழமை)
கேரள சிறுமி கற்பழித்து கொலை: சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம்
கேரள சிறுமி கற்பழித்து கொலை: சி.பி.சி.ஐ.டி.க்கு வழக்கு மாற்றம்
பெரம்பலூர், ஜூலை. 20-
 
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகள் சத்யா (வயது 15). இவர் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. முன்னாள்  எம்.எல்.ஏ. ராஜ்குமார் வீட்டில் தங்கி இருந்தபோது கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
 
இதுதொடர்பாக  முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், தி.மு.க.  மாவட்ட  பிரதிநிதி ஜெய்சங்கர், டாஸ்மாக் ஊழியர் அன்பரசன், டிரைவர் மகேந்திரன்   ஆகியோர்   கைது   செய்யப்பட்டனர்.  அவர்கள்  திருச்சி  மத்திய சிறையில்  அடைக்கப்பட்டு உள்ளனர்.
 
பெரம்பலூர்  கோர்ட் உத்தரவுப்படி  4  பேருக்கும் நேற்று திருச்சி மருத்துவ கல்லூரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.  அதன் பின்னர்  அவர்கள் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
சத்யா  கொலையுண்ட வழக்கில் தங்களுக்கு உரிய நீதி  கிடைக்கவேண்டும்  என்றும்,  குற்றவாளிகள்  கடுமையாக  தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவரது தந்தை  சந்திரன்  கூறியிருந்தார்.  இதேபோல்   இந்த வழக்கை  சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றவேண்டும் என்று பீர்மேடு சமூகநல அமைப்புகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் செய்தனர்.
 
இதையடுத்து   கேரள சிறுமி  கற்பழித்து  கொலை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு இன்று மாற்றபட்டது.  இதற்கான உத்தரவை  சென்னை  ஐகோர்ட்   பிறப்பித்துள்ளது.  அதற்கான ஆணை பெரம்பலூர் போலீசாருக்கு இன்று அனுப்பி  வைக்கப்படுகிறது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

சோனியா, மன்மோகன் சிங்கை வாசலுக்கு வந்து வரவேற்ற மோடி

சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசுவதற்கு பிரதமர் ....»