சென்னை முகப்பேரில் நர்சு கற்பழிப்பு: செக்ஸ் டாக்டர்கள் மீது மேலும் பெண்கள் புகார் || chennai mogappair nurse torcher doctors again womens complaint
Logo
சென்னை 07-02-2016 (ஞாயிற்றுக்கிழமை)
  • மதுரை பேருந்து விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு கவர்னர் ரோசையா இரங்கல்
சென்னை முகப்பேரில் நர்சு கற்பழிப்பு: செக்ஸ் டாக்டர்கள் மீது மேலும் பெண்கள் புகார்
சென்னை முகப்பேரில் நர்சு கற்பழிப்பு: செக்ஸ் டாக்டர்கள் மீது மேலும் பெண்கள் புகார்
சென்னை, ஜூலை.20-

சென்னை அண்ணாநகர் திருமங்கலத்தில் “கேரள ஆயுர்வேதிக் ஹெல்த் சென்டர்” என்ற மருத்துவ மையம் செயல்படுகிறது. இதை கேரளாவைச் சேர்ந்த ஆயுர்வேத டாக்டர் ஷிஜித் (40) என்பவர் நடத்தி வந்தார். இங்கு ஆயுர்வேத மருத்துவ பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த மையத்தில் பயிற்சி பெற கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது நர்சு விண்ணப்பித்து இருந்தார்.

அவரை அழைத்து வர டாக்டர் ஷிஜித் தனது நண்பரான மற்றொரு ஆயுர்வேத டாக்டர் அஜிர் குமாரை கேரளா அனுப்பி வைத்தார். கடந்த 8-ந்தேதி அவர் நர்சை ரெயிலில் சென்னைக்கு அழைத்து வந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நர்சும் டாக்டர் அஜித்குமாரும் ஆட்டோவில் திருமங்கலம் சென்றனர்.

அங்கு ஷிஜித் காருடன் தயாராக இருந்தார். அவர் இருவரையும் காரில் ஏற்றி தாங்கள் முகப்பேரில் தங்கி இருக்கும் விடுதிக்கு ஓய்வு எடுப்பதற்காக அழைத்துச் சென்றார். அங்கு குளித்து விட்டு உடை மாற்ற சென்ற நர்சை ஆயுர்வேத டாக்டர்கள் இருவரும் கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்தனர். நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்துபோன நர்சு யாரிடமும் சொல்லவில்லை. ஆயுர்வேத சென்டருக்கு சென்று 3 நாள் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் வேதனையை மறக்க முடியவில்லை. 3 நாள் கழித்து அங்கிருந்து தப்பினார். தனது உறவினர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து அடைக்கலம் ஆனார். தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி உறவினர்களிடம் கதறினார்.

இதையடுத்து நர்சு தனது உறவினர்களுடன் ஜெ.ஜெ. நகர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் 2 ஆயுர்வேத டாக்டர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இருவரையும் கைது செய்ய விடுதிக்கு சென்றபோது அவர்கள் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டாக்டர் அஜில்குமார் திருச்சியில் இதுபோல் கேரளா ஆயுர்வேதிக் சென்டர் நடத்தி வருகிறார். எனவே இருவரும் திருச்சியில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி தனிப்படை போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது இருவரும் பெரம்பலூரில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் பெரம்பலூர் சென்று 2 டாக்டர்களையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் வேனில் ஏற்றி சென்னை அழைத்து வந்தனர். இங்கு அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். கற்பழிப்பு புகார் கூறிய நர்சுக்கு ஏற்கனவே கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது. தற்போது கைதான 2 டாக்டர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கைதான இரு ஆயுர்வேத டாக்டர்களும் மேலும் பல இளம்பெண்களை வேலை தருவதாகவும், பயிற்சி அளிப்பதாகவும் கூறி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசுக்கு போனில் ரகசிய தகவல்கள் வந்துள்ளன. அதில் பேசிய பெண்கள் தங்களையும் இந்த இரு டாக்டர்களும் ஏமாற்றி கற்பழித்ததாக தெரிவித்தனர்.

குடும்ப மானம் கருதி உடனே புகார் செய்யவில்லை என்றும் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் மீண்டும் புகார் செய்யுங்கள் உங்களைப் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று யோசனை தெரிவித்தனர். எனவே கைதான 2 டாக்டர்கள் மீதும் மேலும் பல செக்ஸ் புகார்கள் வெளிவரும் என்று தெரிகிறது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட நர்சு சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று பெற்றோருடன் தங்கி உள்ளார். போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது அவர் சென்னை வந்து ஆஜர் ஆவார் என்று நர்சின் உறவினர்கள் தெரிவித்தனர். சென்னை அண்ணாநகரில் சில வருடங்களுக்கு முன்பு எலும்பு மருத்துவ டாக்டரான பிரகாஷ் இது போல் பெண்களுடன் செக்ஸ் கொடுமையில் ஈடுபட்டதாக கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டார். டாக்டர் பிரகாஷ் கேரளாவைச் சேர்ந்தவர். இப்போது மீண்டும் கேரளாவைச் சேர்ந்த 2 ஆயுர்வேத டாக்டர்கள் செக்ஸ் புகாரில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சென்னை

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif