முத்துப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: மாணவர் படுகாயம் || muthupettai government student clash one person injury
Logo
சென்னை 29-11-2015 (ஞாயிற்றுக்கிழமை)
  • சிரியாவில் ரஷ்யா விமான தாக்குதல்: 40 பேர் பலி
முத்துப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: மாணவர் படுகாயம்
முத்துப்பேட்டையில் அரசு பள்ளி மாணவர்கள் மோதல்: மாணவர் படுகாயம்
முத்துப்பேட்டை, ஜூலை. 20-
 
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது வழக்கம். கடந்த வாரம் மாணவர்கள் தரப்பில் மோதலில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் தலையிட்டு சமாதானப் படுத்தினார்கள். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் இருதரப்பு மாணவர்கள் மோதிக்கொண்டனர். அவர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதில் மாணவர் மணிரத்தினத்திற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் பதட்டம் உருவானது.
 
முத்துப்பேட்டை டி.எஸ்.பி. பாஸ்கர், மன்னார்குடி டி.எஸ்.பி. அன்பழகன், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. மாணிக்கம் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மன்னார்குடி ஆர்.டி.ஓ. செல்வராஜ், திருத்துறைப் பூண்டி தாசில்தார் வைத்தியநாதன் ஆகியோர் முத்துப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விரைந்துள்ள னர். பள்ளியின் பெற்றோர்- ஆசிரியர் சங்க கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
 
இதில் மாணவர்கள் மோதல் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது முதன்மை கல்வி அலுவலர் வருகிற திங்கள் கிழமை பள்ளிக்கு சென்று விசாரணை நடத்துகிறார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Newbharath.gif


O
P
E
N

close

அண்மை - திருவாரூர்

section1

1,671 பேருக்கு விலையில்லா பொருட்கள்: அமைச்சர் காமராஜ் வழங்கினார்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 5, 17, 18, 19-வது வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கும் ....»

MudaliyarMatrimony_300x100px.gif