பெண்கள் காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 3 அழகிகள் பெங்களூரில் கைது || ladies asylum escap three lady catch in bangalore
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
பெண்கள் காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 3 அழகிகள் பெங்களூரில் கைது
பெண்கள் காப்பகத்தில் இருந்து தப்பி சென்ற 3 அழகிகள் பெங்களூரில் கைது
சேலம், ஜூலை.20-
 
சேலம் அஸ்தம்பட்டி அருகில் அரசு பெண்கள் பாதுகாப்பு மையம் உள்ளது. இந்த மையத்தில் வங்காளதேசத்தைச் சேர்ந்த சபீனா (வயது 20), பியா (22), ரேஷ்மா (26) ஆகியோரும் கொல்கொத்தாவை சேர்ந்த பிங்கியும் (வயது 22) அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
 
விபசார வழக்குகளில் கைதான இவர்கள் பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால் அவர்களை இந்த மையத்தில் போலீசார் அடைத்து வைத்து இருந்தனர். இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் மையத்தில் உள்ள சாவியை யாருக்கும் தெரியாமல் எடுத்து அதன் மூலம் மையத்தின் கதவை திறந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் சேலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதை அறிந்த சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி தனிப்படை அமைத்தார். இதில் துணை கமிஷனர் பாபு மேற் பார்வையில் உதவி கமிஷனர் தங்கத்துரை, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் இடம் பெற்று இருந்தனர்.
 
இவர்கள் பெங்களூர் சென்று அழகிகளை வலைவீசி தேடிவந்தனர். அப்போது வங்காளதேச அழகிகள் 3பேர் வாடகைக்கு வீடு எடுத்து பதுங்கி இருந்தனர். இவர்களை கண்காணித்த போலீசார் இவர்களை கைது செய்தனர். நேற்று இவர்கள் மூன்று பேரும் சேலம் அழைத்து வந்து எண் 3 மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
 
இதை விசாரித்த மாஜிஸ்திரேட் அழகிகள் மூன்று பேரையும் கோவை பெண்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன் பின்னர் 3 அழகிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அழைத்து சென்று ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
 
கொல்கொத்தாவை சேர்ந்த பிங்கி என்ற அழகி இருக்கும் இடம் தெரியவில்லை. இவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். அழகிகள் தப்பி ஓடிய சில நாட்களில் அவர்களை கைது செய்த துணை கமிஷனர் பாபு, உதவி கமிஷனர் தங்கத்துரை மற்றும் தனிப்படை போலீசாரை சேலம் போலீஸ் கமிஷனர் கே.சி.மஹாலி பாராட்டினார். 
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - சேலம்

section1

சேலத்தில் தேசிய மகளிர் கால்பந்து: தமிழ்நாடு-டெல்லி அணிகள் கால்இறுதி போட்டிக்கு தகுதி

சேலத்தில் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான தேசிய கால்பந்து போட்டி நேற்று முன்தினம் பழைய சூரமங்கலத்தில் உள்ள ....»

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif