கணவர் இறந்த சில விநாடிகளில் மனைவியும் உயிர்விட்ட பரிதாபம்: அருகருகே உடல்கள் அடக்கம் || husband dead at the same time wife dead
Logo
சென்னை 08-02-2016 (திங்கட்கிழமை)
  • நட்சத்திர கிரிக்கெட் போட்டி: சென்னை மீண்டும் தோல்வி
  • விசாகப்பட்டினம்: சர்வதேச நாடுகளின் கடற்படை ஆய்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டு பிரதமர் மோடி உரை
கணவர் இறந்த சில விநாடிகளில் மனைவியும் உயிர்விட்ட பரிதாபம்: அருகருகே உடல்கள் அடக்கம்
கணவர் இறந்த சில விநாடிகளில் மனைவியும் உயிர்விட்ட பரிதாபம்: அருகருகே உடல்கள் அடக்கம்
தொட்டியம், ஜூலை. 20-
 
திருச்சி  மாவட்டம் தொட்டியம்  அருகே  உள்ள கொசவம்பட்டியை    சேர்ந்தவர்  நாராயணசாமி   (வயது 83),  முன்னாள்  ராணுவ வீரர்.  இவரது  மனைவி நீலாம்பாள்   (வயது 78). இவர்களுக்கு  ஒருமகனும், ஒரு மகளும், பேரக்குழந்தைகளும்   உள்ளனர்.   வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது மகன் ஜெயராமனுடன் இந்த தம்பதியினர் வசித்து வந்தனர்.
 
இந்நிலையில் நாராயணசாமிக்கு கடந்த வாரம் உடல் நலக்குறைவு  ஏற்பட்டது. அதிலிருந்து அவரது மனைவி நீலாம்பாள் கணவர் அருகில் இருந்தே பார்த்துக்கொண்டார். மிகுந்த சோகத்துடனே காணப்பட்டார்.    நேற்று மதியம்  நாரயணசாமியின்  உடல்நிலை மேலும் மோசமடைந்து  திடீரென  இறந்துவிட்டார்.
 
இதையடுத்து  அவரது உடல்  அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது. இறுதி அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள் பலர்   நாராயணசாமியின் மகன்களிடம்  ஒவ்வொருவராக சென்று துக்கம் விசாரித்தனர். அப்போது கணவன் தன்னை விட்டு பிரிந்து விட்டாரே என குமுறிய நீலாம்பாள் கணவன் உடல் அருகிலேயே மயக்கமடைந்து கீழே   சாய்ந்தார்.  சிறிது நேரத்தில்  அவரும்  பரிதாப மாக உயிரிழந்தார். இதைக் கண்ட அவரது மகனும் உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இருவரையும் அருகருகே வைத்து இறுதி சடங்கு செய்தனர்.  சுடுகாட்டிலும் அவர்கள் உடல் அடுத்தடுத்து அடக்கம்  செய்யப்பட்டன.
 
இவ்வளவு வயதாகியும் கணவன் இறந்த சில மணி நேரத்திலேயே மனைவியும் இறந்தது அவர்களின் இணைபிரியாத அன்பை  வெளிப்படுத்துவதாகவே  அமைந்துள்ளதாக அஞ்சலி செலுத்த வந்தவர்கள் வருத்தத்ததுடன் தெரிவித்தனர்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"
Banner.gif


O
P
E
N

close

அண்மை - திருச்சி

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif