நெருக்கடியை தவிர்க்க வில்வித்தை வீராங்கனைகளின் புதிய யுக்தி || Archery players new strategy to avoid crisis
Logo
சென்னை 31-07-2014 (வியாழக்கிழமை)
  • ஈரோடு: மாணிக்கப்பாளையத்தில் உள்ள தனியார் நெய் குடோனில் தீவிபத்து
  • சென்னை: திமுக சார்பில் இன்று பொது கண்டனப்பொதுக்கூட்டம்
  • பெங்களூரில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறை: நடவடிக்கை எடுக்கக்கோரி இன்று முழு அடைப்பு
  • அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று சுஷ்மாவுடன் சந்திப்பு
  • புதிய ராணுவ தளபதியாக தல்பீர்சிங் சுஹாக் இன்று பொறுப்பு ஏற்பு
நெருக்கடியை தவிர்க்க வில்வித்தை வீராங்கனைகளின் புதிய யுக்தி
நெருக்கடியை தவிர்க்க வில்வித்தை வீராங்கனைகளின் புதிய யுக்தி
லண்டன், ஜூலை, 20-
 
ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் பெண்கள் பிரிவில் பம்பைய்லாதேவி, தீபிகாகுமாரி, சேக்ரோவாலு ஸ்வரோ ஆகியோர் அடங்கிய இந்திய அணி கலந்து கொள்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு 2-வது முறையாக தகுதி பெற்றுள்ள இந்திய அணி வீராங்கனை பம்பைய்லாதேவி அளித்த பேட்டியில்:-
 
நாங்கள் வித்தியாசமாக சில செயல்களை செய்கிறோம். அதில் சினிமா படம் பார்ப்பதும் ஒன்றாகும். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முன்பு காமெடி படங்களை பார்க்கும் போது, அது நெருக்கடியை குறைக்க உதவிகரமாக இருக்கும். சேக்ரோவாலு ஸ்வரோ எளிதில் கோபம் அடையக்கூடியவர்.
 
ஆனால் விரைவில் சாந்தமாகி விடுவார். தீபிகாகுமாரி ஒருபோதும் விவாதம் செய்யமாட்டார். அவர் எப்பொழுதும் அமைதியாக கவனிக்ககூடியவர். நாங்கள் எல்லோரும் சுமூகமாக பழகக்கூடியவர்கள். ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக எங்களுக்கு போதுமான அளவுக்கு காலம் கிடைத்தது.
 
ஒன்றாக இணைந்து விளையாட நல்ல வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கும் சீனியர், ஜுனியர் என்ற பாகுபாடு எதுவும் கிடையாது. நாங்கள் ஒரு குடும்பம் போல் நினைத்து செயல்படுகிறோம் என்றார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - விளையாட்டுச்செய்திகள்

section1

ஜடேஜா விவகாரம்: ஐசிசி தடையை எதிர்த்து அப்பீல் செய்ய பிசிசிஐ முடிவு

இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ....»